தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 30 வருடங்களாக கமர்ஷியல் இயக்குனராக வலம் வருபவர் சுந்தர் சி. அவர் இயக்கிய உள்ளத்தை அள்ளித்தா, அருணாச்சலம், வின்னர், கிரி, கலகலப்பு என ஏராளமான படங்கள் கமர்ஷியலாக பெருவெற்றி பெற்றுள்ளன. முறைமாமன் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான சுந்தர் சி காமெடி, கிளாமர், ஆக்ஷன் என கலந்து கட்டி மசாலா படமாக எடுத்து முன்னணி இயக்குனர் ஆனார்.
சுந்தர் சி படத்துக்கு சென்றால் வாய்விட்டு சிரித்து ரசித்துவிட்டு வரலாம் என்பதே தமிழ் சினிமா ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கும். அதற்கேற்றார் போல சுந்தர் சி படங்கள் சுமாராக் இருந்தாலும் காமெடி கட்டாயம் ஹிட்டாகிவிடும். அதே போல சொன்ன பட்ஜெட்டில் சொன்ன தேதிக்குள் படத்தை எடுத்துக் கொடுத்துவிடுவார் என்ற நல்ல பெயரும் சுந்தர் சி க்கு உண்டு. அதே போல ஷூட்டிங்கில் எந்த பிரச்சனை வந்தாலும் அதை மாற்று யோசனை செய்து சமாளித்துவிடுவார் என்றும் அவரைப் பற்றி சொல்லப்படுவதுண்டு.
அவரது படங்கள் எப்போதுமே மினிமம் கியாரண்டி என்பதற்கு சமீபத்தில் ரிலீஸாகி சக்கைப் போடு போட்டுக் கொண்டிருக்கும் ‘மத கஜ ராஜா’ திரைப்படமே உதாரணம். இந்த படம் எடுக்கப்பட்டு கிட்டத்தட்ட 13 ஆண்டுகள் கழித்து ரிலீஸாகி யாருமே எதிர்பார்க்காத வகையில் மிகப்பெரிய வெற்றிப் படமாகியுள்ளது. பொங்கலுக்கு ரிலீஸான பல படங்களில் அதிகம் வசூல் செய்த படமாக உள்ளது.இப்படியான நிலையில் சுந்தர் சி அன்பே சிவம் படம் குறித்து அளித்த பேட்டி ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், இப்போ இருக்க ஜெனரேஷன் மட்டுமல்லாமல் இன்னைக்கு எல்லோருமே அன்பே சிவம் படம் நல்லா இருக்கு என்று சொல்றாங்க. அப்படி யாராவது என்கிட்ட வந்து சொன்னா செம கோபம் வரும்.
இன்னைக்கி படம் நல்லா இருக்கு என்று பாராட்டுற நீங்க அன்னைக்கு படம் ரிலீஸ் ஆனப்போ எல்லாரும் எங்க போனீங்க. ஒரு உண்மையை சொல்றதுக்கு நான் வெட்கப்படல, ஆடியன்ஸ் தான் வெட்கப்படனும். அன்பே சிவம் படம் வெளியானப்போ அது பிளாப் ஆச்சு. அதனால எட்டு மாசத்துக்கு எந்த வேலையும் இல்லாமல் சும்மா இருந்தேன். அதுக்கப்புறம் கிரி என்ற கமர்சியல் படத்தை எடுத்து தான் சினிமாவில் மீண்டும் நுழைந்தேன். திரும்பவும் அன்பே சிவம் மாதிரி இப்போ நான் படம் எடுக்க விருப்பமா என்றால், நான் திரும்பவும் அது மாதிரி படம் எடுக்க தயாரா இல்லை. எதுக்கு திரும்பவும் ஒரு வருஷம் நான் வேலை இல்லாம உட்காரணுமா. அப்படி ஒரு படத்தை எடுத்து அஞ்சு வருஷம் கழிச்சு எல்லோரும் நல்லா இருக்குன்னு சொல்றதுக்கு எதுக்கு நான் அது மாதிரி ஒரு படத்தை எடுக்கணும்.
எப்போ ஆடியன்ஸ் அன்பே சிவம் மாதிரி ஒரு படத்தை ஏத்துக்கிற மனநிலைக்கு வராங்களோ அப்போ அது மாதிரி ஒரு படத்தை எடுக்கலாம். அன்பே சிவம் படம் எடுத்ததுனால நிறைய நஷ்டம் ஏற்பட்டது மட்டுமல்லாமல் நான் ரொம்ப கஷ்டப்பட்டேன். அது உண்மையிலேயே ஒரு சிறப்பான படம். நாளைக்கு என்னோட பேர பிள்ளைங்க சினிமாவில் என்ன சாதிச்ச என்று கேட்டா அன்பே சிவம் படத்தை எடுத்தேன் என்று கம்பீரமா தலையை நிமித்தி சொல்லுவேன். படம் ரிலீஸ் ஆன போது தியேட்டர்ல படம் பார்க்க யாருமே வரல. அது எனக்கு ரொம்ப கஷ்டமா இருந்துச்சு. இன்னைக்கு தமிழ்நாடு மட்டுமல்லாமல் வேறு எங்கு சென்றாலும் எனக்கு தனி ஒரு மதிப்பும் மரியாதையும் கொடுக்கக்கூடிய படம் அன்பே சிவம். சந்தர்ப்ப சூழ்நிலையும் ரசிகர்களின் மனநிலையும் மாறினால் ஒரு அன்பே சிவம் இல்ல 100 அன்பே சிவம் கொடுக்க நான் தயாராக இருக்கிறேன் என மனம் வருந்து சுந்தர் சி பேசியுள்ளார்.
கொச்சி கடவந்தரா காவல் நிலையத்தில் 2025-ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட ஒழுக்கக்கேடான மனித கடத்தல் வழக்கின் முக்கிய குற்றவாளியாக அக்பர்…
சுள்ளியாவின் ஸ்ரீராமப்பேட்டையில் உள்ள சாலையோரக் குடிநீர் திட்டப் பணிகளின் போது, திறந்தவெளி சாக்கடையில் சிறுவன் ஒருவன் விழுந்து அதிர்ஷ்டவசமாக உயிர்…
தெருவில் தனது பேரக் குழந்தையை கைகளில் ஏந்தியவாறு நடந்து சென்ற முதியவர் ஒருவரை, அங்கு நின்றுகொண்டிருந்த வெறி கொண்ட காளை…
பகலூர் சாலையில் உள்ள அமேசான் அலுவலகப் பகுதியில் அண்மையில் நிகழ்ந்த எதிர்பாராத வெடிவிபத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது…
மதுரை அரசு மருத்துவமனையில் காயமடைந்த தனது நண்பனுக்கு உடனடியாகச் சிகிச்சை அளிக்கக் கோரி இளைஞர் ஒருவர் கடும் ரகளையில் ஈடுபட்டுள்ளார்.…
பெண்களுக்கான முக்கியத்துவமும் உரிமைகளும் பெண்களை மேன்மைப் படுத்துவதற்காகத்தானே தவிர, மற்றவர்களை வன்முறையால் ஒடுக்குவதற்காக அல்ல. பொதுவெளியில் நடைபெறும் இதுபோன்ற சம்பவங்கள்,…