காத்து கிடக்கும் தயாரிப்பு நிறுவனத்திற்கு போக்கு காட்டும் சிவகார்த்திகேயன்.. சுதா மனசு வைத்தால் எல்லாம் நடக்கும்..!!

By admin on ஐப்பசி 8, 2024

Spread the love

பிரபல இயக்குனரான சிபி சக்ரவர்த்தி டான் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். டான் படத்தில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்தார். பிரியங்கா மோகன் ஹீரோயினாக நடித்தார். இந்த படத்தில் எஸ்.ஜே சூர்யா, சமுத்திரக்கனி, சூரி உள்ளிட்ட முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தனர்.

   

டான் திரைப்படம் சூப்பர் ஹிட் ஆகி மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. அதன் பிறகு ரஜினி படத்தை சிபி சக்கரவர்த்தி இயக்குவதாக இருந்தது. ஆனால் அந்த வாய்ப்பு அவருக்கு கிடைக்கவில்லை. இப்போது மீண்டும் சிவகார்த்திகேயனை வைத்து சிபி சக்கரவர்த்தி ஒரு படத்தை இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான அமரன் திரைப்படம் விரைவில் ரிலீஸ் ஆக உள்ளது.

   

 

இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய்பல்லவி நடித்துள்ளார். இதனை அடுத்து ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகும் ஒரு திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இது முடிந்ததும் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் தான் சிவகார்த்திகேயன் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.

BMW கார் வாங்கியுள்ள சிவகார்த்திகேயன் பட இயக்குனர்

ஆனால் சிவகார்த்திகேயன் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடித்து முடித்துவிட்டு சிபி சக்கரவர்த்தி இயக்கும் படத்தில் நடிக்கலாம் என முடிவு செய்துள்ளாராம். ஃபேஷன் ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் சிவகார்த்திகேயனின் கால் சீட்டுக்காக நீண்ட நாட்களாக காத்துக் கொண்டிருக்கின்றனர். அப்படி இருக்க அவர் சுதா கொங்ரா படத்தில் முதலில் நடிக்க போவதாக கூறியதால் தயாரிப்பு நிறுவனத்தினர் என்ன செய்வது என்று தெரியாமல் இருப்பதாக கூறப்படுகிறது.

வரலாற்றை மாற்றிய ஆஸ்கர் வின்னர் சுதா கொங்கரா.. பகிரங்கமாக மன்னிப்பு கேட்டு  போட்ட பதிவு - Cinemapettai