இயக்குனர் ஷங்கர் தனது வலைதள பக்கத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது, சிறை உண்மையிலேயே சிறந்த படம். நான் நிறைய இடங்களில் படம் பார்க்கும்போது கண்ணீர் சிந்தினேன். படத்தில் வரும் ஒவ்வொரு கேரக்டரும் அதில் நடித்த கலைஞர்களின் நடிப்பும் படம் முடிந்த பிறகும் மனதில் நீங்காமல் நிலைத்து நின்றன.
விக்ரம் பிரபு தனது நடிப்பால் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறார். அக்சய் குமார் அனிஷ்மா அனில் குமார் ஆகியோரது நடிப்பு அவர்களது கதாபாத்திரங்களில் அப்பாவித்தனத்தையும் உணர்வுகளையும் அழகாக வெளிப்படுத்தியது. இயக்குனர் சுரேஷ் தனது முதல் படத்திலேயே நம் மனங்களை சிறை பிடித்து விட்டார்.
சிறை படத்தின் இறுதிக்காட்சியில் சொல்லப்பட்ட செய்தி மிகவும் வலுவானதாகவும் இன்றைய காலத்திற்கு மிகவும் பொருத்தமானதாகவும் இருந்தது என்று இயக்குனர் ஷங்கர் சிறை படம் குறித்து தனது பதிவில் பாராட்டி இருக்கிறார்.
அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான கே.ஏ. செங்கோட்டையன் கட்சியிலிருந்து விலகும் மனநிலையில் இருப்பதாக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்துள்ள…
இ ங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் கெவின் பீட்டர்சன், குருகிராமில் உள்ள மதுக்கடை ஒன்றில் தனது சொந்த…
இந்திய வனத்துறை அதிகாரி பர்வீன் கஸ்வான் பகிர்ந்த, ஒரு நாள் மட்டுமே ஆன காண்டாமிருகக் குட்டியின் நெகிழ்ச்சியான காணொளி இணையத்தில்…
தமிழகத்தில் நடைபெறவுள்ள தேர்தலையொட்டி பாஜக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில், வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள (BPL) குடும்பங்களைச் சேர்ந்த மாணவிகளுக்காக…
கேரளாவில் உள்ள 'ஹாஸ்டல் எக்ஸ்ப்' (Hostel Exp) என்ற விடுதியில் தங்கியிருந்த பயணப் பதிவர் அபிமன்யு நந்தல், அங்கு தனக்கு…
ஹரியானா மாநிலம் ஹிசாரில் குடிபோதையில் இருந்த பெண் ஒருவர், சாலையின் நடுவே தனது காரை நிறுத்திவிட்டு ரகளையில் ஈடுபட்ட சம்பவம்…