அந்நியன் பட கிளைமாக்ஸ்.. நினைச்சது வேற, எடுத்தது வேற.. குதூகலமான விக்ரம்.. இயக்குனர் சங்கர் பகிர்ந்த தகவல்.!

By Mahalakshmi on சித்திரை 20, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் எப்போதும் பிரம்மாண்ட திரைப்படத்தை கொடுப்பதை வழக்கமாக வைத்திருப்பவர் இயக்குனர் சங்கர். அப்படி அவரது படைப்பில் வித்தியாசமாக பிரம்மாண்டமாக உருவான திரைப்படம் தான் அந்நியன். 2005 ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படத்தில் விக்ரம், சதா, பிரகாஷ்ராஜ், விவேக் உள்ளிட பல பிரபலங்கள் நடித்திருப்பார்கள். இப்படம் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்தது.

   

இந்த படத்தில் நடிகர் விக்ரம் அம்பி, அந்நியன், ரெமோ என மூன்று கேரக்டர்களின் நடித்திருப்பார். இப்படம் அன்றளவில் 86 கோடி வசூல் செய்தது. விக்ரம் கேரியரில் முக்கிய திரைப்படமாகவும் இந்த படம் அமைந்திருந்தது. விக்ரமும் சரி, பிரகாஷ்ராஜும் சரி தனக்கு கொடுக்கப்படும் கதாபாத்திரத்திற்கு 100% நடித்துக் கொடுக்கக்கூடிய ஒரு நடிகர்கள். இவர்களின் நடிப்புக்கு தீனி போடும் வகையில் தான் இப்படம் அமைந்திருந்தது.

   

 

முதலில் இப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சியைப் பொறுத்தவரை சுவாரசியமாக கொண்டு போக வேண்டும் என்பதில் உறுதியாக இருந்திருந்தார் சங்கர். படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை எழுதும்போது ஒரே ஷாட்டில் விக்ரம் வெவ்வேறு கதாபாத்திரங்களாக மாறும் காட்சியை அவர் எழுதவே இல்லையாம். பின்னர் தான் அவர் ஸ்கிரிப்ட் எழுதிக் கொண்டிருக்கும்போது யோசனை தோன்றியதாம்.

விக்ரம் வெவ்வேறு கதாபாத்திரத்தில் மாறி பேசினால் எப்படி இருக்கும் என்று, பின்னர் உதவி இயக்குனருடன் கலந்து பேசி அந்த ஸ்கிரிப்ட்டை எழுதி இருக்கிறார். அம்பி வசனங்களை கருப்பு கலரிலும், அந்நியன் வசனங்களை சிகப்பு கலரிலும் அடித்து இருந்தார். பின்னர் டயலாக் பேப்பரை படித்த விக்ரம் மிகவும் ஆச்சரியப்பட்டு போனாராம். ரொம்ப நல்லா இருக்கு சார் என்று குதூகலமாகிவிட்டதாக ஷங்கர் கூறியிருந்தார்.

இதைத்தொடர்ந்து படத்தின் காட்சிகளில் விக்ரமும் பிரகாஷ்ராஜும் போட்டி போட்டுக் கொண்டு நடித்தார்கள். அதில் கூட விக்ரம் நடிப்பை பார்த்த பிரகாஷ்ராஜ் டேய் டேய் நானே பெரிய நடிகன், என்கிட்டயே நடிச்சு காட்டுறயே என்று பிரகாஷ்ராஜ் கொடுத்த ரியாக்ஷன் இன்றளவும் வைரலாகி வருகின்றது. தமிழ் சினிமாவில் பேசப்படும் கிளைமாக்ஸ் காட்சிகளில் ஒன்றாக இன்றளவும் இருக்கின்றது அந்நியன் திரைப்படம்.