#image_title
தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் ஷங்கர். இவரின் மகளான அதிதி நடிகையாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகியுள்ளார். டாக்டர் படிப்பை முடித்துள்ள இவர் நடிப்பு மேல் கொண்ட அதிக ஆர்வம் காரணமாக கார்த்தி நடிப்பில் வெளியான விருமன் திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்த அசத்தியிருந்தார்.
அந்தத் திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்தது. அதன் பிறகு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான மாவீரன் திரைப்படத்தில் தனது முழுத்திறமையையும் காட்டி இருந்தார் அதிதி. தற்பொழுது இவர் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் ஆதரவை பெற்று , பல்வேறு திரைப்படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வருகிறார்.
இயக்குனர் ஷங்கர் அவர்களுக்கு ஐஸ்வர்யா, அதிதி என்ற மகள்களும், அர்ஜித் என்கிற மகனும் உள்ளனர். இவரின் மூத்த மகளான ஐஸ்வர்யா 2021ல் ரோஹித் என்பவரை திருமணம் செய்துகொண்டர். இவர்களது திருமணம் கொரோனா ஊரடங்கு சமயத்தில் நடைபெற்றது. ஐஸ்வர்யாவின் முதல் கணவர் ரோஹித் ஒரு கிரிக்கெட் வீரரும் கூட, இவர் பாண்டிச்சேரி அணிக்காக ரஞ்சி போட்டியில் விளையாடியும் உள்ளார்.
திருமணமான சில மாதங்களிலேயே ஷங்கரின் மருமகன் ரோஹித், பாலியல் வழக்கு ஒன்றில் சிக்கினார். அவர் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் நடவடிக்கையும் எடுக்கப்பட்டது. இந்த புகாரில் சிக்கியதை தொடர்ந்து ஷங்கரின் மூத்த மகளான ஐஸ்வர்யா கணவரை விவாகரத்து செய்துவிட்டதாக கூறப்பட்டது. இந்நிலையில் அவருக்கு இரண்டாவது திருமணம் நடைபெற உள்ளதாகவும், தருண் கார்த்திகேயன் என்பவருடன் திருமணம் நிச்சயமாகி உள்ளது என்றும் கூறப்படுகிறது.
#image_title
தருண், சினிமாவில் உதவி இயக்குனராக பணியாற்றி வருகிறாராம். அதுமட்டுமின்றி இவர் பாடகர், பாடலாசிரியர் என பன்முகத்திறமை கொண்டவஎன்றும் கூறப்படுகிறதுர் . இதனை உறுதிப்படுத்தும் வகையில் . தன் அக்காவின் திருமண நிச்சயதார்த்தத்தின் போது எடுத்த புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் அதிதி ஷங்கர். நிச்சயதார்த்தம் தொடர்பான புகைப்படத்தை பார்த்த ரசிகர்களும், திரைபிரபலங்களும் ஐஸ்வர்யாவுக்கு தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.
அதிமுகவில் அடுத்தடுத்து அரங்கேறி வரும் உட்கட்சி பூசல்கள் மற்றும் குழப்பங்களுக்கு மத்தியில், அக்கட்சியில் இருந்து மேலும் ஒரு முக்கிய நிர்வாகி…
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) ஆட்சிக் கவிழ்ப்பு சதித் திட்டம் மற்றும் எம்.எல்.ஏ-க்கள்…
பிரசவம் என்பது ஒரு பெண்ணின் வாழ்வில் மிக முக்கியமான மற்றும் அற்புதமான நிகழ்வாகும். குழந்தை பிறக்கும் போது, அதனுடன் சேர்ந்து…
தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழக அரசு பொறுப்பேற்றது முதல், முந்தைய ஆட்சிக்காலங்களில் முறைகேடுகளில் ஈடுபட்ட திமுக முன்னாள் அமைச்சர்களைக் குறிவைத்துத்…
மத்திய பிரதேசத்தில் 7 மாத கர்ப்பிணி மனைவியை கொலை செய்த கணவருக்கு விசாரணை நீதிமன்றம் விதித்த ஆயுள் தண்டனையை, ஜபல்பூர்…
ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு ஏற்பட்ட உட்கட்சிப் பூசல்களால் அதிமுக பல பிரிவுகளாக உடைந்தது. இறுதியாக எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளர் பொறுப்பை…