#image_title
தமிழில் இயக்குனர் சசி இயக்கிய ரோஜா கூட்டம் திரைப்படத்தின் மூலமாக நடிகராக அறிமுகமானவர் ஸ்ரீகாந்த். அந்த படம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனதும் நம்பிக்கைக்குரிய இளம் நடிகராக உருவானார். அடுத்து அவர் நடிப்பில் உருவான ஏப்ரல் மாதத்தில் மற்றும் பார்த்திபன் கனவு ஆகிய திரைப்படங்களும் நல்ல வெற்றியைப் பெற்றன.
ஆனால் அதன் பிறகு தேர்வு செய்து நடித்த படங்கள் எல்லாமே அவருக்கு வெற்றியைப் பெற்றுத் தருவதில்லை. அதன் பிறகு 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு வெற்றிக்காக காத்திருக்கிறார். இதற்கிடையில் அவர் தெலுங்கில் சில படங்களில் செகண்ட் ஹீரோவாகவும் நடித்துள்ளார்.
எதுவும் வொர்க் அவுட் ஆகாததால் சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்க ஆரம்பித்தார். இந்நிலையில் இப்போது அவர் நடித்துள்ள சத்தமின்றி முத்தம் தா என்ற படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த படமாவது அவருக்கு திருப்புமுனையாக அமையுமா என்ற எதிர்பார்ப்போடு காத்திருக்கிறார். இப்போது தனக்கான இடத்துக்காக அவர் போராடி வருகிறார். சிறப்பான தொடக்கம் கிடைத்தும் அவர் அதை தக்கவைத்துக் கொள்ள முடியாமல் போனதுதான் சோகம்.
இதற்கிடையில் அவர் மல்டி ஹீரோ படங்களிலும் குணச்சித்திர வேடங்களில் நடித்தார். அப்படி அவர் நடித்த படங்களில் ஒன்றுதான் ‘நண்பன்’. ஷங்கர் விஜய் கூட்டணியில் மிகப்பிரம்மாண்டமாக உருவான இந்த படம் பெரிய வெற்றியைப் பெறவில்லை.
#image_title
இந்த படத்தில் நடந்த ஒரு சுவாரஸ்யமான சம்பவத்தை ஸ்ரீகாந்த் ஒரு நேர்காணலில் பகிர்ந்துள்ளார். அதில் “முதலில் இந்த படத்துக்கு ஹீரோவாக விஜய்தான் கமிட் ஆனார். ஆனால் அவர் ஏற்கனவே ஒரு படத்தில் நடித்து வந்ததால் ஹேர் ஸ்டைல் மாற்ற வேண்டும் என்பதற்கு அவர் ஒத்துக் கொள்ளவில்லை. அது சம்மந்தமாகக் கருத்து வேறுபாடு வந்து அவர் கோபித்துக் கொண்டு போய்விட்டார்.
அப்போது இயக்குனர் ஷங்கர் சார் எங்களிடம் ‘நம் கதையின் பஞ்சவன் பாரிவேந்தன் யார் என்பது என இன்னும் உறுதியாகவில்லை. நாம் ஷூட்டிங்கைத் தொடங்குவோம். ஹீரோ யார் என்பதை பின்னர் உறுதி செய்வோம்” என்றார். இப்படியே நாங்கள் 15 நாட்கள் ஷூட்டிங் முடித்தோம். இடையில் சூர்யா, மகேஷ் பாபு பெயரெல்லாம் பரிசீலனைக்கு வந்தது” எனக் கூறியுள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலம் பிருந்தாவனத்தில் உள்ள கிரிவலம் வரும் பாதையில் (பரிக்ரமா மார்க்) பெண்கள் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கும் வகையில் ஒரு…
அமெரிக்காவின் ஆர்கன்சாஸ் மாகாணத்தில் உள்ள லிட்டில் ராக் பகுதியில், 26 வயது பள்ளி ஆசிரியை ஒருவர் 15 வயது சிறுவனைப்…
கேரள மாநிலம், திருவனந்தபுரம் மாவட்டம் நெடுமங்காடு பகுதியைச் சேர்ந்த அஷ்கார் (31) என்பவர், தனது மனைவி அமீனாவை வரதட்சணை கேட்டுத்…
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகே உள்ள ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் ஆய்வாளராகப் பணியாற்றி வந்த திலீபன், தனக்குக் கீழ் பணியாற்றும்…
ஆஸ்திரேலியாவில் திருமணமான ஆசிரியை ஒருவர் தனது பள்ளியில் படிக்கும் 17 வயது மாணவருடன் பாலியல் ரீதியாகத் தொடர்பு வைத்திருந்ததாகக் கைது…
கோடை விடுமுறை முடிந்து பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களில் இருந்து சென்னை திரும்பத் தொடங்கியுள்ள நிலையில், தமிழகத்தின் முக்கிய நகரங்களில்…