சக்தி பிரபு இயக்கத்தில் மீண்டும் பிரபுதேவா ஜாலியோ ஜிம்கானா என்ற படத்தில் நடித்துள்ளார். எஸ்.ஜே சீனு இயக்கத்தில் பிரபுதேவா, மடோனா செபாஸ்டின் நடிப்பில் உருவான திரைப்படம் ஜாலியோ ஜிம்கானா. இந்த படத்தின் மீது எதிர்பார்ப்பு கூடியுள்ளது. இந்த படத்தில் பர்ஸ்ட் லுக் ட்ரெய்லர் ஏற்கனவே வெகுவான வரவேற்பு பெற்ற நிலையில் தற்போது எதிர்பார்ப்பு கூடியுள்ளது என்று சொல்லலாம். இந்த படத்தில் இடம்பெற்றுள்ள “ஒரு போலீஸ்காரனை கட்டிக்கிட்டா லத்தியை வைத்து அடிப்பான்” என்ற பாடல் தற்போது சோசியல் மீடியாவில் அதிகமாக வைரலாகி வருகிறது.

சார்லி சாப்லின், சார்லி சாப்ளின் 2 படத்தில் நிக்கி கல்ராணி உடன் சக்தி சிதம்பரம் இயக்கத்தில் ஆட்டம் போட்ட பிரபுதேவா தற்போது அவர் அதே இயக்குனர் இயக்கத்தில் மடோனா செபாஸ்டின் உடன் இந்த பாடலுக்கு தாறுமாறாக ஆட்டம் போட்டு உள்ளார். ஜாலியோ ஜிம்கானா’ படத்திலிருந்து வெளியான ‘போலீஸ்காரன கட்டிக்கிட்டா’ என்ற பாடல் தொடர்பாக நேற்று நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில், போலீஸ்காரன் பாடலை சக்தி சிதம்பரம் எழுதியதாக வீடியோவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

#image_title
ஆனால் இந்த பாடலை பத்திரிகையாளர் ஜெகன் கவிராஜ் என்பவர் எழுதியுள்ளார் என்றும், எதற்காக அதை மறைத்து உங்கள் பெயரை போட்டுள்ளீர்கள் என்று சக பத்திரிக்கையாளர்கள் சக்தி சிதம்பரத்திடம் கேள்வி எழுப்பினர். ஆனால் இயக்குநர் சக்தி சிதம்பரம் பதிலளிக்காமல் பாதியிலேயே கிளம்பினார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அது குறித்து விளக்கம் அளித்துள்ளார் சக்தி சிதம்பரம்.

அதாவது சின்ன பையனோடு லைஃபை புடுங்கி எனக்கு வாழணும்னு ஆசை இல்ல. நான் பொதுவா பாடலாசிரியர் இல்ல. நான் டைரக்டர். ஆனால் இந்த படத்திற்கு நான் பாடல் எழுதினேன். நான் எழுதின பாட்டுக்கு இன்னோருத்தர் பெயர் போட முடியாது. நான் பெத்த புள்ளைக்கு இன்னொருத்தர் பேரு எப்படி வைக்க முடியும். அவரு ரெண்டு பாட்டுக்கு நாலு வரி எழுதினாரு. அவரு பாடல் எழுதல. நான் தான் எழுதினேன்.
