Categories: சினிமா

என்ன வேணும்னே எஸ்.ஏ. சந்திரசேகர் வெளிய அனுப்பிட்டாரு.. பல வருடம் கழித்து உண்மையை உடைத்த இயக்குனர் செந்தில்நாதன்..!

Spread the love

தமிழ் சினிமாவில் 90களில் ரசிகர்களால் விரும்பப்படும் ஒரு இயக்குனராக திகழ்ந்தவர் தான் இயக்குனர் செந்தில் நாதன். நடிகர் விஜயகாந்த் நடிப்பில் 1988 ஆம் ஆண்டு வெளியான பூந்தோட்ட காவல்காரன் என்ற திரைப்படம் மூலம் தான் இவர் இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தான் அறிமுகமான முதல் படத்திலேயே அற்புதமான படைப்பை கொடுத்திருந்தார். அந்த திரைப்படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து ராம்கி, அர்ஜுன் மற்றும் சரத்குமார் போன்ற ஹீரோக்களை வைத்து பல திரைப்படங்களை இவர் இயக்கியுள்ளார். கடைசியாக 2009 ஆம் ஆண்டு வெளிவந்த உன்னை நான் என்ற படத்தை இயக்கிய செந்தில் அந்த படத்தை தயாரிக்கவும் செய்தார். ஆனால் அந்த படம் மோசமான தோல்வியை சந்தித்ததால் கடன் தொல்லைக்கு ஆளானார்.

அதனைத் தொடர்ந்து தொலைக்காட்சி தொடர்களை இயக்கி வந்த செந்தில்நாதன், ஜெயா டிவி, ஜீ தமிழ் மற்றும் சன் டிவி போன்ற பல தொலைக்காட்சிகளிலும் சீரியல் தொடர்களை இயக்கி வந்தார். இறுதியாக சன் டிவியில் ஒளிபரப்பான நாயகி என்ற தொடரில் இவர் நடித்து வந்தார். பிறகு சில காரணங்களால் அந்த தொடரில் இருந்து இயக்குனர் செந்தில் நீக்கப்பட்டார். தற்போது அவர் என்ன செய்கிறார் என்று யாருக்குமே தெரியாத அளவிற்கு உள்ளார். இவர் இயக்குனராவதற்கு முன்பு விஜயின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ சந்திரசேகரிடம் தான் அசிஸ்டெண்டாக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் இது குறித்து அவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் பல தகவல்களை பகிர்ந்து கொண்டார்.

அதில், எஸ் எஸ் சி சார் கூட பத்து வருஷம் இருந்தேன். நீதிக்கு தண்டனை திரைப்படத்திற்கு பிறகு, அவரே ஒரு நாள் என்னை அழைத்து, இயக்குனர் ஆவதற்கான எல்லா தகுதியும் உன்கிட்ட இருக்கு இனிமே நீ என் கூட இருந்தா அது நல்லா இருக்காது இன்னைக்கே நான் உன்னை வேலையை விட்டு தூக்க போறேன் என்று கூறினார். உடனே நான், சார் அதெல்லாம் வேண்டாம் நான் இப்படியே உங்க கூட இருந்துக்கிறேன் அப்படின்னு கூறினேன்.

அந்த சமயத்துல சோபா அம்மா வந்து, இல்ல நீங்க தனியா போய் படம் பண்றது தான் நல்லது நீங்க இருக்குற தைரியத்துல தான் இவர் அவர் வேலையை சரியா பார்க்கிறது இல்லை, நீங்க போய் தனியா படம் பண்ணுங்கன்னு அவங்க என்கிட்ட சொன்னாங்க. அப்போ என்னையும் என்கூட இருந்தா இன்னொருத்தரையும் நீங்க கிளம்புங்க நாங்க வேற யாரையாவது பார்க்கிறோம் என்று வெளியே அனுப்புனாங்க. அந்த டைம்ல ஷங்கரும் அங்க உதவி இயக்குனராக இருந்தார். நான் இருக்க டைம்ல ஒரு மூணு படம் அவர் எங்க கூட பண்ணாரு என்று செந்தில்நாதன் பேசியுள்ளார்.

Nanthini

Recent Posts

“எங்களை ஏமாத்திட்டாங்க, யார் அந்த கறுப்பு ஆடு?”… துர்கா ஸ்டாலின் கையில் எடுத்த ‘லிஸ்ட்’: தூக்கப்படப் போகும் முக்கிய தலைகள்… அடுத்த பரபரப்பு…!

திமுகவின் அசைக்க முடியாத கோட்டையாகக் கருதப்பட்ட கொளத்தூர் தொகுதியில், அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் சந்தித்த எதிர்பாராத தோல்வி தமிழக அரசியல்…

3 minutes ago

அடுத்த அதிர்ச்சி… விஜய்யின் பதவி ஏற்பு விழா திடீர் ரத்து… பின்னால் இருக்கும் அதிர்ச்சி தரும் காரணம்… பரபரக்கும் அரசியல் களம்…!

சமீபத்தில் நடந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களைப் பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது.…

4 minutes ago

“இப்போ விஜய் முதல்வர் தான் ஆனா?”… 6 மாதத்தில் தமிழகத்தில் மீண்டும் தேர்தல்… ஆனந்த் சீனிவாசன் வீசிய அரசியல் குண்டு…!

தமிழ்நாட்டுத் தேர்தல் களத்தில் நிலவும் தற்போதைய அரசியல் சூழல் குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் ஊடகப் பிரிவுத் தலைவர் ஆனந்த்…

7 minutes ago

சம்பாதித்தது போதும், இனி வாழ வேண்டும்..! 11 வருட உழைப்பிற்குப் பின் இளைஞர் எடுத்த அதிரடி முடிவு…!

35 வயதான ஒரு நபர், தனது 11 ஆண்டுகால கார்ப்பரேட் வாழ்க்கையைத் துறந்து, வாழ்க்கைத் தேர்வுகளை மறுபரிசீலனை செய்துள்ளார். பல…

11 minutes ago

‘திருமாவளவனுக்கு முதல்வர் பதவி’… யாரும் எதிர்பாராத திருப்பம்… காலையிலேயே பரபரப்பு…!

தமிழக அரசியலில் தற்போதைய பரபரப்பான சூழலில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் சிந்தனைச் செல்வன் தனது முகநூல் பதிவின் மூலம்…

12 minutes ago

“MA, M.Sc, PhD முடித்தவர்களுக்கு நற்செய்தி… 3,540 காலிபணியிடங்கள்… மாதம் சம்பளம் ரூ.28,850… டீச்சிங் அசோசியேட் பணிக்கான மாபெரும் அறிவிப்பு… உடனே விண்ணப்பியுங்கள்”…!!!

ராஜஸ்தான் பணியாளர் தேர்வு வாரியம் (RSMSSB) தற்போது காலியாக உள்ள 3,540 டீச்சிங் அசோசியேட் (Teaching Associate) பணியிடங்களை நிரப்புவதற்கான…

14 minutes ago