தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனர்களில் ஒருவர்தான் இயக்குனர் பாரதிராஜா. 1977 ஆம் ஆண்டு கமல், ரஜினி மற்றும் ஸ்ரீதேவி நடிப்பில் வெளியான 16 வயதினிலே படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து புதிய வளர்ப்புகள், கிழக்கே போகும் ரயில், சிகப்பு ரோஜாக்கள், முதல் மரியாதை, கிழக்குச் சீமையிலே உள்ளிட்ட பல வெற்றி படங்களை இயக்கியுள்ளார். இதில் 1985 ஆம் ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில் சிவாஜி மற்றும் வடிவுக்கரசி நடிப்பில் வெளியான திரைப்படம் தான் முதல் மரியாதை.
இந்த திரைப்படம் வெளியாகி பல வருடங்கள் ஆனாலும் இன்றும் பாராட்டப்படும் ஒரு திரைப்படமாக உள்ளது. இப்படத்தை இயக்கி முடித்த பாரதிராஜா வழக்கம் போல தனது எழுத்தாளர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்களுக்கு பின்னணி இசை இல்லாமல் போட்டு காட்டியுள்ளார்.அதில் படத்தைப் பார்த்த சிவாஜி குடும்பத்தினர் படத்தை வெகுவாக பாராட்டிய நிலையில் சிவாஜி இயக்குனர் பாரதிராஜாவுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்தார். ஆனால் தயாரிப்பாளர் பஞ்சு அருணாச்சலம் மற்றும் இசையமைப்பாளர் இளையராஜா இருவரும் படம் பிடிக்கவில்லை இது ஓடாது என்று கூறியுள்ளனர்.
பின்னணி இசை சேர்ப்புக்காக படம் பார்த்த இளையராஜா, இந்த படம் ஓடாது, என்ன படம் எடுத்திருக்க மூன்று நாள் கூட தாண்டாத என்று கூறியுள்ளார். பாரதிராஜா இந்த நெகட்டிவ் கருத்துக்களை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. இதனை தொடர்ந்து முதல் மரியாதை படத்தில் கிளைமாக்ஸ் காட்சிக்காக இசை அமைத்த இளையராஜா, பின்னணி இசையுடன் அந்த ரியலை பாரதிராஜாவுக்கு காட்டியுள்ளார்.
அதனைப் பார்த்து பாரதிராஜா உடனே இளையராஜாவின் கையைப் பிடித்துக் கொண்டு படம் பிடிக்காமலேயே இவ்வளவு பிரமாதமாக இசையமைத்திருக்கிறாயே என்று கூறி கண்கலங்கியுள்ளார். உடனே இளையராஜா படம் பிடிக்குது பிடிக்கவில்லை என்பது எனது தனிப்பட்ட கருத்து, ஆனால் நான் என் தொழிலுக்கு துரோகம் செய்ய முடியாது, நான் அழைத்தவுடன் சரஸ்வதி வருகிறது என்றால் அதற்கு நான் உண்மையாக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார். அதன் பிறகு வெளியான இந்த படம் முதல் மூன்று நாட்கள் படத்தை பார்க்க தியேட்டருக்கு கூட்டமே இல்லாத நிலையில் அடுத்தடுத்த நாட்களில் ரசிகர்களின் வருகை அதிகரித்து முதல் மரியாதை படம் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது.
தமிழக அரசியல் சூழலில் நிலவும் பரபரப்புக்கு இடையே, சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைமை அலுவலகத்தில்…
தமிழக அரசியலில் நடிகர் விஜய்யின் 'தமிழக வெற்றிக் கழகம்' (தவெக) கட்சி 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக…
தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று தமிழக வெற்றிக் கழகம் (தவெக) அதிக தொகுதிகளைக் கைப்பற்றியுள்ள நிலையில், அக்கட்சியின் தலைவர்…
ஹைதராபாத் மாநகரத்தின் ஷீ டீம்ஸ் பிரிவின் தலைவரான டிசிபி பி. கவிதா, நள்ளிரவு நேரங்களில் பெண்கள் எதிர்கொள்ளும் பாதுகாப்பு சிக்கல்களை…
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ் கட்சி, விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்திற்கு…
தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியமைப்பதில் நிலவும் இழுபறி காரணமாக, சென்னை நேரு ஸ்டேடியத்தில் இன்று நடைபெறவிருந்த பதவியேற்பு விழா அதிரடியாக…