தமிழ் சினிமாவில் பல வெற்றிப் படங்களை தந்தவர் இயக்குனர் செல்வராகவன். இப்போது பல படங்களில் நடித்தும் வருகிறார். செல்வராகவன் நடிகை சோனியா அகர்வாலை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். கருத்து வேறுபாட்டால் சில ஆண்டுகளில் இருவரும் பிரிந்து விட்டனர். பிறகு கீதாஞ்சலி என்பவரை செல்வராகவன் 2வது திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு 3 பிள்ளைகள் உள்ளனர்.
இந்நிலையில் கீதாஞ்சலி அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் செல்வராகவனுடன் அவர் எடுத்துக் கொண்ட குடும்ப புகைப்படங்களை எல்லாம் நீக்கிவிட்டார். ஆனால் இன்னும் இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட் பெயரை கீதாஞ்சலி செல்வராகவன் என்றுதான் அவர் பயன்படுத்தி வருகிறார். இதற்கிடையே செல்வராகவன் கீதாஞ்சலி இடையே மோதல் நிலவுவதாகவும் விரைவில் இருவரும் பிரிய உள்ளதாகவும் தகவல் வேகமாக பரவியது.
இந்நிலையில் இயக்குனர் செல்வராகன் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவு ஒன்று இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் செல்வராகவன் கூறியிருப்பதாவது, திடீரென உங்களுக்கு அனைத்தும் தவறாய் போகும். சுற்றியுள்ளவர்கள் அனைவரும் துரோகம் செய்வது நன்றாக தெரியும். நீ எல்லாம் கடவுளா? உனக்கு எவ்வளவு பூஜை செய்து வழிபட்டேன் என பிதற்றுவீர்கள்.
அப்போது அமைதியாக இருங்கள். சில காலம்தான். பெரும் மழை பனியாய் போகும். அனைத்தும் சரியாகிவிடும். இது கடவுளின் நியதி என செல்வராகவன் அந்த பதிவில் கூறியிருக்கிறார். செல்வராகவனுக்கு துரோகம் செய்தது யார்? கீதாஞ்சலிக்கும் அவருக்கும் என்ன பிரச்சனை? என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இரயில்வே டி.ஆர்.எம் அலுவலகத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த 29 வயதான அஜய் குஷ்வாஹா, தேநீர் குடிப்பதற்காக வெளியே சென்றிருந்தபோது எதிர்பாராத…
புனேயின் சோம்வார் பேத் பகுதியில், 10 வயது சிறுவன் ஒருவன் அடுக்குமாடி குடியிருப்பின் மின்தூக்கியில் வைத்து மிகக் கொடூரமாகத் தாக்கப்படும்…
2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நடிகர் அர்ஜுன் தாஸின் கார் தேர்தல் பறக்கும் படையினரால் சோதனை செய்யப்பட்டு,…
பெங்களூருவைச் சேர்ந்த திலீப் என்ற 28 வயது ஜிம் பயிற்சியாளர், திருமணமான பெண்ணின் மிரட்டல் காரணமாக தற்கொலை செய்து கொண்ட…
ஏற்கனவே விதியால் உடைந்து போயிருந்த ஒரு மாற்றுத்திறனாளி முதியவரிடம், ஒரு சிறுமி வந்து பேசுகிறாள். "பாபா, உங்களுக்கு ஏதாவது வேண்டும்…
மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் பகுதியில் நடந்த இந்தச் சம்பவம், மின் பாதுகாப்பு குறித்த அலட்சியம் எவ்வளவு பெரிய உயிர் இழப்பை…