இந்த புகைப்படத்தில் இருக்கும் சிறுவன் பிரபல இயக்குனரின் மகன்.. யாருன்னு கண்டுபுடிங்க பாப்போம்..

By Begam

Updated on:

சமீபகாலமாகவே பிரபலங்களின் சிறுவயது புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்தவகையில் தற்பொழுது பிரபல இயக்குனரும், நடிகருமான செல்வராகவன் மகனின் சமீபத்திய புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் இயக்குனர் செல்வராகவன். இவரது இயக்கத்தில் வெளிவந்த முதல் திரைப்படம் ‘துள்ளுவதோ இளமை’. இயக்குனர் செல்வராகவன் பிரபல நடிகர் தனுஷின் அண்ணனும் ஆவார். இவர் இறுதியாக தனுஷ் நடிப்பில் வெளியே வந்த ‘நானே வருவேன்’ திரைப்படத்தை இயக்கியிருந்தார்.

   

இயக்குனராக மட்டுமின்றி தற்பொழுது நடிகராகவும் பல திரைப்படங்களில் நடித்துக் கொண்டு வருகிறார். அந்த வகையில் சாணிக்காயிதம், பீஸ்ட் போன்ற திரைப்படங்களில் நடித்திருந்தார். இறுதியாக இவர் நடிப்பில் இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் ‘பகாசுரன்’ திரைப்படம் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

 

நடிகை சோனியா அகர்வால் காதல் திருமணம் செய்து அவரை விவாகரத்து செய்தார். இதை தொடர்ந்து அவர் கீதாஞ்சலி என்பவரை திருமணம் செய்து கொண்டார். தற்பொழுது மூன்று குழந்தைக்கு தந்தையாக உள்ளார். சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் இயக்குனர் செல்வராகவனின் மனைவி கீதாஞ்சலி.  இவர் தற்பொழுது தனது மகனுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி அவரின் லேட்டஸ்ட் புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்துள்ளார். இப்பதிவினை பார்த்த ரசிகர்கள், அவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். இதோ அந்த பதிவு…

 

author avatar