அதை மட்டும் அந்த குடும்பம் செஞ்சிருந்தால், விஜயகாந்த் இன்னும் கொஞ்ச நாள் உயிரோடு இருந்திருப்பார்.. SA.சந்திரசேகர் சொன்ன பகீர் தகவல்..

By Sumathi

Updated on:

தமிழ் சினிமாவில் பல வெற்றிப்படங்களை கொடுத்தவர் இயக்குநர் எஸ்ஏ சந்திரசேகர். இவரது மகன்தான் நடிகர் விஜய். சமீபத்தில் காலமான விஜயகாந்தும், எஸ்ஏ சந்திரசேகரும் நெருங்கிய நண்பர்களாக இருந்தவர்கள். விஜயகாந்தின் ஆரம்ப காலத்தில் கேப்டனின் பல படங்களை இயக்கியவர் எஸ்ஏ சந்திரசேகர்தான். விஜயகாந்த் மறைவு குறித்து எஸ்ஏ சந்திரசேகர் சமீபத்திய நேர்காணலில் கூறியதாவது, விஜயகாந்தின் உயிரற்ற பார்க்க என்னால் முடியவில்லை. காரணம், எனக்கு அப்படி அவரை பார்க்க மனதில் தைரியம் இல்லை. அவரை விட 12 வயது மூத்தவன் நான் இருக்கிறேன். ஆனால் அவர் போய்விட்டார். 1980 முதல் 1995 வரை நானும் அவரும் சகோதர்களாக, நண்பர்களாக இருந்தோம். வாழ்ந்தோம். என்னை அவரது குரு என்பார். எங்க டைரக்டர் என குறிப்பிடுவார்.

   

முதலில் விஜயகாந்த் எங்களை போன்ற நண்பர்களுக்காக வாழ்ந்தார். திருமணத்துக்கு பிறகு குடும்பத்துக்காக வாழ்ந்தார். அரசியல் துவங்கிய பிறகு மக்களுக்காக வாழ்ந்தார். இப்போது இறந்த பிறகு அனைவரது மனங்களிலும் வாழ்கிறார். இரண்டு ஆண்டுகளுக்கு முன் அவரை கடைசியாக சந்திதேன். அவரும் அழுதார். நானும் அழுதேன். ஏதோ என்னிடம் சொல்ல முயற்சிக்கிறார். அவரால் பேச முடியவில்லை. வாயில் இருந்து வார்த்தைகள் வரவில்லை. அதன்பிறகு அவரை சந்திக்க பலமுறை முயற்சிக்கும் அவரது குடும்பம் அனுமதிக்கவில்லை.

ஆனால் இந்த நேரத்தில் ஒரு உண்மையை சொல்லி ஆக வேண்டும். அவரை என்னை போன்ற பல நண்பர்களை அந்த மோசமான காலகட்டத்தில் சந்தித்து இருந்தால், அவர் மனதில் பழைய உற்சாகம், சக்தி, வலிமை வந்திருக்கும். என்னை, ராதாரவி, சந்திரசேகர், ஆர்கே செல்வமணி போன்றவர்களை சந்தித்து இருந்தால் அந்த உற்சாகமும், ஆற்றலும் அவருக்கு மனதுக்கு ஒரு புது தெம்பை கொடுத்திருக்கும்.

ஆனால் என்ன காரணத்தாலோ, எங்களை எல்லாம் ஒரு கட்டத்தில் பார்க்க அவர்கள் ஒத்துக்கொள்ளவில்லை. அப்படி சந்தித்திருந்தால், விஜயகாந்த் இன்னும் இருந்திருப்பார் என்பது என்னுடைய நம்பிக்கை. ஏனெனில் மனசுக்கு பிடித்தமானவர்களை பார்க்கும்போது ஒரு உற்சாகம், தெம்பு மனதில் ஏற்படும். அதை அவர்கள் செய்திருக்கலாம் என்று வருத்தமாக கூறியிருக்கிறார் இயக்குநர் எஸ்ஏ சந்திரசேகர்.

author avatar
Sumathi