“இனிமேல் எந்த பிறவியில் உன்னை பார்க்கப் போகிறேன் நண்பா”.. இதயம் நொறுங்கியது… “சின்ன பாப்பா பெரிய பாப்பா” இயக்குனர் மறைவுக்கு கண்ணீரோடு எம்.எஸ் பாஸ்கர் இரங்கல்…!

Spread the love

‘சின்ன பாப்பா பெரிய பாப்பா’ சீரியல் இயக்குனர் எஸ்.என்.சக்திவேல் (60) இன்று காலமானார். 90களில் வெளிவந்த நகைச்சுவை கலந்த சீரியல் தான் ‘சின்ன பாப்பா பெரிய பாப்பா’. பெரிய அளவில் அனைவராலும் பார்க்கப்பட்ட சீரியல். ஸ்ரீபிரியா. நளினி, வேததர்ஷினி. நிரோஷா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். பட்டாபி என்ற கதாபாத்திரத்தில் எம்.எஸ்.பாஸ்கர் நடித்திருந்தார். இதன் மூலமாக தான் எம்.எஸ்.பாஸ்கர் அவர்களுக்கு சினிமாவில் வாய்ப்பு கிடைத்தது.

தற்போது இயக்குனர் எஸ்.எம்.சக்திவேல் இன்று அதிகாலை உடல் நலக்குறைவால் காலமானார்.  ‘இவனுக்கு தண்ணியில கண்டம்’ என்ற திரைப்படம்  மற்றும்  பட்ஜெட் குடும்பம் என்ற சீரியலையும் இயக்கியுள்ளார். மறைந்த எஸ்.என்.சக்திவேல் அவர்களுக்கு எம்.எஸ்.பாஸ்கர் இரங்கல் தெரிவித்து வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளார்.

வீடியோவில் பேசியவர், என் வாழ்க்கையில் இந்த அளவுக்கு வர காரணம் பட்டாபி என்ற கதாபாத்திரம். அந்த கதாபாத்திரத்தை கொடுத்தவர் எஸ்.எம்.சக்திவேல் அவர்கள். என் வாழ்க்கையில் கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம் அவர். அவர் இறந்த செய்தியை கேள்விப்பட்டவுடன் மிகுந்த வேதனைக்கு உள்ளானேன். போராட்டம் தான் அவருடைய வாழ்க்கை. அவருடைய ஆன்மா இறைவனிடம் செல்ல வேண்டுகிறேன். இனிமேல் எந்த பிறப்பில் பார்க்கப் போகிறோம் என்று வேதனையாக பேசியிருந்தார்.

Divyamayakannan

Recent Posts

“சித்திரவதை அனுபவித்த 10 வயது சிறுமி…” பலாத்காரம் செய்து கொன்ற குற்றவாளி…. ஏற்கனவே 5 வழக்குகள்…. நடுங்க வைக்கும் குற்றப்பத்திரிக்கை…!!

தெற்கு டெல்லியின் மெஹ்ராலி பகுதியில் கடந்த ஜூன் மாதம் 10 வயது சிறுமி ஒருவர் கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை…

45 seconds ago

ஐயோ கொடுமையே… சாட் ஜிபிடியால் பறிபோன உயிர்… ஐஐடி தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து மாட்டிக்கொண்ட மாணவர் தற்கொலை… மும்பையில் பரபரப்பு…!!

மும்பையில் உள்ள மும்பை ஐஐடி உயர்கல்வி நிறுவனத்தில் நடைபெற்ற தேர்வின் போது, ஆற்றல் அறிவியல் மற்றும் பொறியியல் துறையைச் சேர்ந்த…

54 seconds ago

மதுரையா இது… மரண பூமியா?… ஒரே நாளில் 3 கொடூர கொலைகள்… போலீஸ் நிலையத்திற்கே சவால் விட்ட ரவுடிகள்… பதறும் தமிழகம்..!

மதுரை மாவட்டத்தில் ஒரே நாளில் அடுத்தடுத்து நடந்த 3 கொலைச் சம்பவங்கள் பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளன. இதில் குறிப்பாக,…

11 minutes ago

பெரும் சோகம்…! நடிகர் திலகம் சிவாஜியின் மகள் சாந்தி காலமானார்… அதிர்ச்சியில் திரையுலகினர்….!!

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மகளும், முன்னணி நடிகர் பிரபுவின் மூத்த சகோதரியுமான சாந்தி இன்று காலை காலமானார். கடந்த…

18 minutes ago

ஐயோ… ஆதார் பயோமெட்ரிக் இல்லைனா கேஸ் மானியம் கட்?… எண்ணெய் நிறுவனங்களின் அதிரடி எச்சரிக்கை…!!

மத்திய அரசு, மானிய விலையில் வழங்கப்படும் சமையல் கியாஸ் சிலிண்டர்கள் தகுதியான வீடுகளுக்கு மட்டுமே சென்றடைவதை உறுதி செய்ய பயோமெட்ரிக்…

20 minutes ago