தமிழ் சினிமாவில் தற்போது இருக்கும் இளம் இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். மாநகரம் என்ற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமான இவர் முதல் படத்திலேயே தன்னுடைய சிறப்பான திறமையை வெளிப்படுத்தி அனைத்து ரசிகர்களையும் தன் பக்கம் ஈர்த்திருந்தார். இந்தத் திரைப்படத்தை தொடர்ந்து இவர் இயக்கிய கைதி திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
காரணம் ஹீரோயின் எதுவும் இல்லாமல் பாடல் காட்சிகள் எதுவும் இல்லாமல் பரபரப்பான ஆக்சன் டிராமாவாக இயக்கி அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தார். இந்த இரண்டு திரைப்படங்களுக்குப் பிறகு தளபதி விஜய் வைத்து மாஸ்டர் திரைப்படத்தை இயக்கி சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்தார். அதைத்தொடர்ந்து நடிகர் கமலஹாசனை வைத்து விக்ரம் என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார். இந்த திரைப்படம் 450 கோடி வசூல் செய்து சாதனை செய்தது.
தற்போது அவர் கடைசியாக மீண்டும் விஜய் அவர்களை வைத்து வியோ திரைப்படத்தை இயக்கியிருந்தார். இந்த திரைப்படம் அக்டோபர் 19ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கின்றது. சமீபத்திய பேட்டி ஒன்றில் தனது குடும்பத்தை பற்றி பேசியிருந்தார். அதாவது லோகேஷ் கனகராஜ் அவர்களின் தந்தை ஒரு பஸ் கண்டக்டர், அம்மா ஹோம் மேக்கர்.
தான் பத்தாம் வகுப்புக்கு பிறகு பன்னிரெண்டாம் வகுப்பு வரை ஹாஸ்டலில் இருந்து படித்ததாகவும், அதன் பிறகு காலேஜ் ஹாஸ்டலில் படித்ததால் வீட்டுடன் எனக்கு பெரிய அளவு தொடர்பு இல்லாமல் போய்விட்டது என்று கூறினார். அது மட்டும் இல்லாமல் இவர் கடந்த 2012 ஆம் ஆண்டு தனது காதலியான ஐஸ்வர்யா என்பவரை திருமணம் செய்து கொண்டார். தற்போது இவருக்கு ஒரு பெண் குழந்தை இருக்கின்றது.
சமீபத்தில் இவரின் உதவி இயக்குனரான இரத்தினகுமார் பேட்டி ஒன்றை அளித்திருந்தார் அதில் லோகேஷ் கனகராஜ் தன்னிடம் சமீபத்தில் படம் வேலைகளை முடித்துவிட்டு தனது குழந்தையை சென்று பார்க்கும் போது அவர் வளர்ந்திருந்தார். எனக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது என்று கூறினார். அதாவது அவருடைய சிறிய சிறிய சந்தோசங்களில் கூட நம்மால் இருக்க முடியவில்லை. இதையெல்லாம் தியாகம் செய்துவிட்டு நாம் ஒரு படத்தை எடுக்கிறோம் என்றால் அது எவ்வளவு ஒர்த்தாக இருக்க வேண்டும். அதற்காகவே அவர் மெனக்கிட்டு வேலை செய்து வருகிறார் என்று அவர் பேட்டி அளித்திருந்தார்.
ஜெய்ப்பூரைச் சேர்ந்த சம்பலால் என்ற வர்த்தகர், தனது ஸ்கூட்டரில் ரூ. 20 லட்சம் பணப்பையை வைத்துவிட்டு, சாலையில் கச்சோரி சாப்பிடுவதற்காக…
பெங்களூரு மெட்ரோவில் இளம்பெண் ஒருவர் தன்னை அனுமதியின்றி ரகசியமாகப் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்த நபரை கையும் களவுமாகப் பிடித்து…
நடிகர் சைஃப் அலிகான் கௌன் பனேகா கரோபதியில் கலந்துகொண்டபோது பரிசாகப் பெற்ற இரண்டு வருட நெய் விவகாரம் சமூக வலைதளங்களில்…
சீனாவில் உள்ள குவாங்சூ நகரில்லைச் சேர்ந்த நபர் ஒருவர், மற்றவர்களுக்காகப் பேசிச் சண்டையிடும் அல்லது விவாதிக்கும் வித்தியாசமான சேவையை வழங்கி…
பொதுவாக 30 முதல் 50 வயதுடைய பெண்களுக்கு மட்டுமே வரக்கூடிய கர்ப்பப்பை நார்திசுக்கட்டி, தற்போது 28 வயது இளம்பெண்ணின் வயிற்றிலிருந்து…
ஜார்ஜியா மாநிலம் டைபி தீவு அருகே முன்னாள் ராணுவ வீரர்களுக்கான தொண்டு நிறுவனமான 'நாட் லக்கி பிஷிங்' அமைப்பின் சார்பாக…