திருமணத்திற்கு முன்பு ராமராஜன் செய்த காதல் லீலைகள் குறித்து பகிர்ந்துள்ளார். அதில், நான் ராமராஜனுடன் சேர்ந்து 15 திரைப்படங்களில் நடித்திருக்கிறேன். அதில் ஷூட்டிங் சமயத்தில் என்னுடைய டச்சப் கேர்ள் கிட்ட லெட்டர் கொடுத்து விடுவாரு. உடனே அந்த பொண்ணு அவனெல்லாம் நல்லாவே இல்ல அந்த முட்ட கண்ண லெட்டர் குடுத்தான் என்று என்கிட்ட சொல்லுவா. அந்தப் பொண்ணுக்கு சாக்லேட் எல்லாம் வாங்கித் தருவாரு.
அப்படித்தான் ஒரு நாள் மனைவி சொல்லே மந்திரம் என்ற படத்தின் ஷூட்டிங்கில் நடித்துக் கொண்டிருந்தபோது அவர் கோவிலுக்கு சென்று விட்டு என்னிடம் வந்து குங்குமம் கொடுத்தார். உடனே நான் என்ன இது என்று கேட்டதும் கோவிலுக்கு போயிட்டு வந்தேன் அதான் குங்குமம் கொடுக்க வந்தேன் என்று சொன்னாரு. என்னோட தலையில வையுங்க என்று சொன்னதும் என்னுடைய நெத்தி வகுட்டுல் குங்குமத்தை வச்சுட்டாரு. என்ன ஒரு காதலியாக நினைத்துக்கொண்டு இருந்த அவர் அன்னைக்கு எனக்கு குங்குமம் வச்சுட்டாரு என்று நளினி பேசியுள்ளார்.
