தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித். ரசிகர்களால் தல என அன்புடன் அழைக்கப்படும் அஜித் இப்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகும் குட் பேட் அக்லி திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். ஏற்கனவே அஜித் நடிப்பில் உருவான விடாமுயற்சி திரைப்படம் ரிலீஸ்க்கு தயாராக உள்ளது.

பிரபல இயக்குனரான ராஜ் கபூர் இயக்கத்தில் உருவான அவள் வருவாளா ஆனந்த பூங்காற்றே ஆகிய படங்களில் அஜித் நடித்துள்ளார். இந்த நிலையில் இயக்குனர் ராசு கபூர் ஒரு பேட்டியில் கலந்து கொண்டார். அப்போது அவர் கூறியதாவது, அவள் வருவாயா படம் நடிக்கும் போது தல அஜித் பேக் பெயினோட தான் வந்து நடிச்சாரு.

#image_title
அவரைப் பற்றி சொல்லனும்னா அவரு ஒரு சுயம்பு சினிமாவுல தானா உருவான நபர் தான். அஜித் யாருடைய சப்போர்ட்டும் இல்லாம தன்னிச்சையாக நின்னு ஜெயிச்சவரு. அவர பத்தி சொல்லனும்னா சொல்லிக்கிட்டே போகலாம். அவர் ஜாதகத்துல அவர் முதலமைச்சராக வாய்ப்பு இருக்கு. அதை அவர் மிஸ் பண்ணிக்கிட்டே போறாரு.

அது ஏன்னு எனக்கு ஒண்ணுமே புரியல. அந்த அளவுக்கு அவர் கான்ஃபிடன்ட்டா தன்னம்பிக்கையோட இருக்கும் ஒரு நடிகர். அவள் வருவாயோ படம் பண்ணும் போதும் சரி, ஆனந்த பூங்காற்றே படம் பண்ணும் போதும் சரி அவரோட குணம் மாறவே இல்ல. அஜித் அக்கரை உள்ள மனிதர் என கூறியுள்ளார்.
