காதலியை கரம் பிடித்த இயக்குனர் பி எஸ் மித்ரன்… வைரலாகும் அழகிய திருமண புகைப்படங்கள்… வாழ்த்துக்கள் கூறும் ரசிகர்கள்…

By Begam on மாசி 12, 2023

Spread the love

தமிழ் சினிமா உலகில் வளர்ந்து வரும் இயக்குனர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் பிஎஸ் மித்ரன். இவர் 2018ல் வெளியான ‘இரும்புத்திரை’ என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். இத்திரைப்படத்தில் விஷால், சமந்தா, அர்ஜுன் என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தனர்.

   

இத்திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருந்தார். இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தையே பெற்றது. இத்திரைப்படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயனை வைத்து ஹீரோ படத்தினை இயக்கினார்.

   

 

அதிரடி திரில்லர் அணியில் உருவாக்கப்பட்ட இத்திரைப்படமும் ரசிகர்கள் மத்தியில் போதிய அளவிற்கு வரவேற்பு பெறவில்லை. இதை தொடர்ந்து நடிகர் கார்த்தி உடன் இணைந்த மித்ரன் ‘சர்தார்’ எனும் மாபெரும் வெற்றி படத்தை கடந்த வருடத்தில் கொடுத்தார்.

இத்திரைப்படத்தில் நடிகர் கார்த்தி இரட்டை வேடத்தில் நடித்தார். ஜிவி பிரகாஷ் இசையமைத்த இத்திரைப்படத்தில் அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட் ஆனது. இதைத்தொடர்ந்து இயக்குனர் மித்ரன் கேஜிஎப் ஹீரோ யாஷை வைத்து புதிய படத்தை இயக்கப் போவதாக இணையத்தில் தகவல்கள் வெளியாகி உள்ளது.

கடந்த ஆண்டு இயக்குனர் பி எஸ் மித்ரனுக்கு ஆஷா மீரா ஐயப்பன் என்பவருடன் நிச்சயதார்த்தம் நடந்தது. ஆஷா மீரா ஐயப்பன் இவர் ஒரு சினிமா பத்திரிக்கையாளர். தற்பொழுது இவர்களின் ரிசப்சன் நிகழ்ச்சி நடந்துள்ளது .

அப்பொழுது எடுக்கப்பட்ட அழகான புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி படு வைரலாகி வருகிறது.