தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர்தான் இயக்குனர் பிரேம்குமார். இவர் கன்னட சினிமாவில் ஒரு இந்திய திரைப்பட இயக்குனர் ஆவார். 1976 ஆம் ஆண்டு பிறந்த இவர் நடிகையாக இருந்து தயாரிப்பாளராக மாறிய ரக்ஷிதா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு சூர்யா என்ற ஒரு மகனும் உள்ளார். பிரேம் முதலில் தனது பணியை 1993 ஆம் ஆண்டு நிஸ்கர்ஷா என்ற திரைப்படத்தில் உதவி இயக்குனராக தொடங்கினார். அவர் பல்கலைக்கழகத்திற்கு முந்தைய படிப்பை தொடர்ந்தார். படம் முடிந்ததும் பெங்களூருக்கு திரும்புவதற்கு முன் படிப்பை முடிக்க அவர் தனது சொந்த ஊருக்கு திரும்பினார்.
பின்னர் ஜிகே முத்துராஜுடன் இணை இயக்குனராக ஒரு சில படங்களில் பணியாற்றினார். கரியா என்ற படத்தை இவர் முதல் முதலில் இயக்கிய நிலையில் அந்த படத்தில் நிஜ வாழ்க்கையின் பெரிய டான்களை தேர்ந்தெடுத்ததற்காக ரசிகர்களின் பாராட்டைப் பெற்றார். தொடர்ந்து மூன்று சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த பிரேம் தமிழில் 96 திரைப்படம் மூலம் ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களையும் கவர்ந்தார். இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி, திரிஷா உள்ளிட்டோர் நடித்திருந்த நிலையில் அனைவருடைய பள்ளி பருவ நினைவுகளை எடுத்துச் செல்லும் படமாக இந்த படம் அமைந்திருந்தது.
இந்த திரைப்படத்தை தொடர்ந்து இயக்குனர் பிரேம் ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்கள் மனதிலும் இடம் பிடித்தார். தற்போது கார்த்தி, அரவிந்த்சாமி, ராஜ்கிரண் மற்றும் ஸ்ரீதிவ்யா உள்ளிட்டோர் நடிப்பில் மெய்யழகன் என்ற திரைப்படத்தை பிரேம்குமார் இயக்கி முடித்துள்ளார். இந்த திரைப்படம் செப்டம்பர் 27ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. வித்தியாசமான கதைக்களத்துடன் உருவாகியுள்ள இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் பிரேம் சமீபத்தில் ஒரு யூட்யூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் பல சுவாரசியமான தகவல்களை பகிர்ந்து கொண்டார். அதில், நான் முதலில் சினிமா துறையை தேர்ந்தெடுத்து படிக்கவில்லை. எனக்கு முதலில் ஆர்வம் இருந்தது natiomal geography photography படிக்கணும் என்ற ஆசை தான் இருந்தது. அதற்காக சில போட்டோக்களை எடுத்துக் கூட பிரபல போட்டோகிராபர் ஒருவரிடம் நான் அனுப்பி இருந்தேன். அதன் பிறகு சில காரணங்களால் சினிமா மீது ஆர்வம் திருப்பி அப்படியே கடந்து விட்டேன் என கூறியுள்ளார்.