#image_title
தமிழ் சினிமாவில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக சூப்பர் ஸ்டாராக வலம் வந்து கொண்டிருக்கிறார் ரஜினிகாந்த். அவர் படங்கள் இன்றளவும் வசூல் சாதனை படைத்து வருகின்றன. சமீபத்தில் அவர் நடித்த ஜெயிலர் திரைப்படம் 600 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது.
1975 ஆம் ஆண்டு வெளியான அபூர்வ ராகங்கள் திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார் ரஜினிகாந்த். அந்த படத்தில் ஒரு மிகச்சிறிய வேடமே அவருக்குக் கொடுக்கப்பட்டு இருந்தது. அதன் பிறகு மூன்று முடிச்சு உள்ளிட்ட திரைப்படங்களில் வில்லனாக நடித்து தனக்கென ஒரு ஸ்டைலை உருவாக்கினார்.
1980 கள் வரை அவர் வில்லனாகவும், கமல், சிவகுமார் மற்றும் ஜெய் சங்கர் ஆகியோரின் படங்களில் இரண்டாவது கதாநாயகனாகவும் நடித்து வந்தார். முரட்டுக் காளை உள்ளிட்ட சில படங்களின் வெற்றியால் அவர் வசூல் மன்னனாக சூப்பர் ஸ்டாராக மாறினார்.
தமிழ் தவிர தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளிலும் ரஜினிகாந்த் நடித்துள்ளார். இந்தியில் பெரும்பாலும் அவர் மற்ற ஹீரோக்களோடு இணைந்து நடித்துள்ளார். அமீர்கான், அமிதாப் பச்சன் மற்றும் சுனில் தத் ஆகியோரோடு அவர் டபுள் ஹீரோ சப்ஜெக்ட்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில் இயக்குனர் பிரவீன் காந்தி வட இந்தியாவில் ரஜினியின் மாஸ் பற்றி ஒரு சம்பவத்தைப் பகிர்ந்துள்ளார். அதில் “நான் ராட்சசன் முடித்ததும் சஞ்சய் தத்துக்குக் கதை சொல்ல பாம்பே சென்றிருந்தேன். அப்போது சஞ்சய் தத் அங்கு மாஸ் ஹீரோ. அவர் என்னிடம் இந்த சம்பவத்தை சொன்னார். ஒரு படத்தில் ரஜினியோடு அவர் இணைந்து நடித்துள்ளார். அப்போது ரஜினியின் சட்டையைப் பிடிப்பது போன்ற காட்சியாம். அதில் நடித்தபோது திடீரென்று பார்வையாளர்களில் பலர் கொதித்துப் போய்விட்டார்களாம்.
எப்படி ரஜினியின் சட்டையைப் பிடிக்கலாம் என கூச்சல் போட்டார்களாம். அப்போது சஞ்சய் தத் “மும்பை என் ஏரியா… இங்கு நான் மாஸ் ஹீரோ, ஆனா ரஜினிக்காக ரசிகர்கள் என்னை கோபித்துக் கொள்கிறார்கள் என்றால் அவரின் மாஸ் எப்படிப்பட்டது என்பதை புரிந்துகொள்ளுங்கள்’ எனக் கூறினாராம்.
கடந்த 2021-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின் போது, எடப்பாடி தொகுதியில் போட்டியிட்ட அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது…
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் (TVK) சார்பில் போட்டியிடும் வேட்பாளர் செங்கோட்டையன், அளுக்குளி எம்.ஜி.ஆர். நகரில்…
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள சித்துராஜபுரத்தில், அதிமுக வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான ராஜேந்திர பாலாஜி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டபோது…
சென்னையில் தேர்தல் பரப்புரையின் போது விதிகளை மீறியதாகத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது காவல்துறை வழக்குப் பதிவு…
தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று பிற்பகல் 3 மணிக்கு தனது…
கடலூர் மாவட்டத்தின் ஸ்ரீமுஷ்ணம், பாளையங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட விசிக தலைவர் திருமாவளவன், திமுக ஆட்சியைத் தொடர…