சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய இயக்குனர் பா ரஞ்சித் கூறியதாவது, முதல்ல என்னை திட்டிட்டு இருந்தாங்க. அப்புறம் மாரி செல்வராஜை திட்டினார்கள். அந்த சமயத்துல வெற்றிமாறன் சார் அசுரன் படம் எடுத்தார். அப்புறம் அவரையும் திட்ட ஆரம்பிச்சிட்டாங்க. எப்பவுமே திட்டற இடத்துல என்னோட போட்டோ தான் இருக்கும். இப்போ மாரி செல்வராஜ் வெற்றிமாறன் சார் போட்டாவும் இருக்கு. தமிழ் சினிமாவை அழித்த 3 இயக்குனர்கள் அப்படீன்னு வந்துவிடும்.
ஒரு வருஷத்துக்கு 300 படம் வருது. 2 வருஷத்துல 600 படம் வந்திருக்கும். எத்தனை இயக்குனர்கள் இயக்கியிருப்பாங்க? நான் 2 வருஷத்துக்கு ஒரு படம் எடுக்கிறேன். மாரி 5 படம் இயக்கி இருக்கான். வெற்றி சார் 3 வருடத்தில் ஒரு படம் இயக்குகிறார். 10 வருஷத்துல 7 படம்தான் எடுத்து இருக்கேன். அப்போ அந்த 7 படத்துல தமிழ் சினிமா சீரழிஞ்சு போச்சா? அப்போ மத்த இயக்குனர்கள் எல்லாம் என்ன பண்றாங்க? தமிழ் ரசிகர்கள் நீங்க அப்போ எல்லா படத்தையும் ஓட வைக்கலாமே என்று இயக்குனர் பா ரஞ்சித் ஆவேசமாக பேசியிருக்கிறார்.
