தமிழ் சினிமாவில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக தன்னுடைய காமெடியாள் அனைத்து தரப்பு வயதினரையும் நாள்தோறும் சிரிக்க வைக்கும் மகனாக இருப்பவர் தான் நடிகர் கவுண்டமணி. கோவையில் இருந்து தமிழ் சினிமாவுக்கு வந்து கோலோச்சியிரும் கலைஞர்களில் ஒருவராக இருப்பவர்தான் கவுண்டமணி. இவர் காமெடி நடிகராக மட்டுமல்லாமல் ஹீரோ, வில்லன் மற்றும் குணச்சித்திரம் என அனைத்து வேடங்களிலும் தன்னுடைய அற்புதமான நடிப்பாலும் கவுண்டர்களாலும் முத்திரை பதித்தவராக விளங்குகிறார். அடிப்படையில் மேடை நாடக கலைஞராக இருந்து அதன் பிறகு சினிமாவில் முக்கிய நடிகராக உருவெடுத்தவர். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான சிவாஜி, ரஜினி, கமல் உள்ளிட்ட அனைத்து முன்னணியின் நடிகர்களுடனும் பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.
குறிப்பாக செந்திலுடன் இணைந்து இவர் நடித்த காமெடி காட்சிகள் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தது. செந்தில் லோடு இணைந்து மட்டுமல்லாமல் கவுண்டமணி தனியாகவும் பல திரைப்படங்களில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் பாக்கியராஜ் இயக்கியுள்ள ஒத்த ஓட்டு முத்தையா என்ற திரைப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி இன்று நடைபெற்ற நிலையில் அதில் இயக்குனர் பி.வாசு கலந்து கொண்டார். அப்போது மேடையில் நடிகர் கவுண்டமணி குறித்து அவர் புகழ்ந்து பேசி உள்ளார். அதில், கவுண்டமணி சார் பற்றி பேச வேண்டுமானால் நிறைய பேசிக்கிட்டே போகலாம்.
அவர்கிட்ட மேனேஜர், டிரைவர் என யாருமே கிடையாது. டைரி கூட வச்சிக்க மாட்டாரு. எது சொன்னாலும் அதை மனசுல பதிய வைச்சிபாரு. சூட்டிங் இருந்தால் கூட அவரே கார் ஓட்டிக்கிட்டு வந்து சேருவாரு. என் கூட சேர்ந்து அவர் 24 படம் பண்ணி இருக்காரு. அதுல 20 படம் சூப்பர் ஹிட். தமிழ் சினிமாவுல அதிகமா என் கூட இணைந்து தான் அவர் நிறைய படம் பண்ணி இருக்காரு. அவர் நடிக்கும் காமெடி சீன்களை ஷூட்டிங் எடுக்கும் போது சிரிப்பை அடக்கவே முடியாது. அந்த அளவுக்கு நடிப்பாரு. சிவாஜி மற்றும் நாகேஷ் போன்ற பல முன்னணி நடிகர்களுடன் நடித்த கவுண்டமணி சிவாஜியின் அடுத்த தலைமுறையான பிரபுவுடன் இணைந்தும் நடித்துள்ளார்.
சிவாஜியே கவுண்டமணி மாதிரி நடிக்க தமிழ் சினிமாவில் ஆளே இல்லை என பலமுறை பாராட்டி இருக்காரு. அவ்வளவு பெரிய நடிகர்கள் எல்லோருமே கவுண்டமணிக்கு தீவிர ரசிகர்கள் தான். இன்னும் சொல்லப்போனால் இளையராஜா சார் கவுண்டமணி காமெடி பார்த்து அப்படி விழுந்து விழுந்து சிரிப்பாரு. அவர் சும்மா இருக்க டைம்ல கவுண்டமணி காமெடி தான் அதிகமா பாப்பாரு. சிவாஜியே பார்த்து வியந்த கவுண்டமணி பத்தி பேச வார்த்தையே இல்லை. அந்த அளவுக்கு சிறப்பான நடிகர் என்று பி.வாசு புகழ்ந்து பேசி உள்ளார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ் கட்சி, விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்திற்கு…
தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியமைப்பதில் நிலவும் இழுபறி காரணமாக, சென்னை நேரு ஸ்டேடியத்தில் இன்று நடைபெறவிருந்த பதவியேற்பு விழா அதிரடியாக…
திமுகவின் அசைக்க முடியாத கோட்டையாகக் கருதப்பட்ட கொளத்தூர் தொகுதியில், அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் சந்தித்த எதிர்பாராத தோல்வி தமிழக அரசியல்…
சமீபத்தில் நடந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களைப் பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது.…
தமிழ்நாட்டுத் தேர்தல் களத்தில் நிலவும் தற்போதைய அரசியல் சூழல் குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் ஊடகப் பிரிவுத் தலைவர் ஆனந்த்…
35 வயதான ஒரு நபர், தனது 11 ஆண்டுகால கார்ப்பரேட் வாழ்க்கையைத் துறந்து, வாழ்க்கைத் தேர்வுகளை மறுபரிசீலனை செய்துள்ளார். பல…