Categories: CINEMA

ஷூட்டிங் ஸ்பாட்டில் இயக்குனர் மிஸ்கின் செய்த வேலை.. அதிர்ச்சியில் உறைந்த ஒட்டுமொத்த படக்குழு..!

தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைகளை இயக்கி சிறந்த இயக்குனராக வலம் வருபவர் மிஷ்கின். இவர் முதன்முதலாக விஜய் சேதுபதியுடன் கைகோர்த்துள்ள திரைப்படம் தான் ட்ரெயின். இந்த திரைப்படத்தை கலைப்புலி எஸ் தானு தயாரிக்கின்றார். படத்தில் நாசர் வினய் ராய், பாவனா சம்பத்ராஜ், பப்ளு பிரித்விராஜ், கேஸ் ரவிக்குமார், கணேஷ் வெங்கட்ராமன், கனிகா, தியா சீதபள்ளி சிங்கம் புலி உள்ளிட்ட பல பிரபலங்கள் நடிக்கின்றனர்.

ஒரு ரயில் பயணத்தில் நடைபெறும் அதிரடி திகில் நிறைந்த கதையாக இந்த ட்ரெயின் திரைப்படம் இருக்கும் என்று கூறப்படுகின்றது. நடிகர் விஜய் சேதுபதி இந்த திரைப்படத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கின்றார். மேலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் டிம்பிள் ஹயாதி நடிக்க உள்ளார் .

சில திரைப்படங்களில் இசையமைப்பாளராகவும் வலம் வரும் மிஷ்கின் இந்த திரைப்படத்தில் இயக்குத்துடன் சேர்ந்து இசையமைக்கவும் இருக்கின்றார். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு பூஜையுடன் தொடங்கியது. இந்த நிகழ்ச்சியில் இயக்குனர் வெற்றிமாறன், நடிகர் சங்க தலைவர் நாசர், தயாரிப்பாளர் சங்கத்தின் நிர்வாகி முரளி ராமசாமி, தயாரிப்பாளர் அன்பு செழியன் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்கள்.

இயக்குனர் மிஷ்கின் கடைசியாக சைக்கோ என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார். அதனை தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்தி வரும் இவர் லியோ திரைப்படத்திலும் நடித்திருந்தார். பின்னர் மீண்டும் இயக்கத்திற்கு தொடங்கி இருக்கும் மிஷ்கின் இந்த திரைப்படத்தை இயக்கி வருகின்றார். மேட்டுப்பாளையத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகின்றது.

ரயில் சம்பந்தப்பட்ட கதை என்பதால் பெரும்பாலான காட்சிகள் ரயில்வே டிராக்கில் மட்டுமே எடுக்கப்பட்டு வருகின்றது. படத்தின் காட்சிகளை பார்ப்பதற்காக மக்கள் கூட்டம் கூட்டமாக வந்திருக்கிறார்கள். இதனால் கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதைப் பார்த்து கோபமடைந்த மிஷ்கின் மைக்கை புடுங்கி அவரது பாணியில் கண்டபடி திட்டிருக்கின்றார்.

அதாவது அவர் படப்பிடிப்பு தளத்தில் பேசுவதே கெட்ட வார்த்தைகள் தான் பேசுவார். அப்படி பேசவும் அனைவரும் ஷாக்காகி இருக்கிறார்கள். அதனை தொடர்ந்து அவரது தம்பி இது பொது இடம் இப்படி சண்டை போட்டால் பிறகு ஏதாவது பிரச்சினை வந்து விடப்போகிறது என்று அவரை அமைதியாக இருக்க சொல்லி இருக்கின்றார். அவர் சரமாரியாக பேசியதை பார்த்து படக்குழுவில் இருந்த அனைவரும் ஷாக்காகி விட்டார்களாம்.

Mahalakshmi
Mahalakshmi

Recent Posts

சூப்பர் ஹிட்டான அந்நியன் படத்தில் இத்தனை மிஸ்டேக் இருக்கா..? இத நீங்க கவனிச்சீங்களா..?

பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் கடந்த 2005-ஆம் ஆண்டு அந்நியன் திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் விக்ரம் ஹீரோவாக…

8 மணி நேரங்கள் ago

100 கோடி கலெக்ஷன் பண்ண நடிகர்களின் முதல் படங்கள்.. எந்த நடிகரும் செய்யாத சாதனையை படைத்த இளம் நடிகர்..!!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உலக நாயகன் கமல்ஹாசன் ஆகியோர் தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகர்களாக வலம் வருகின்றனர். இவர்களுக்கு பிறகு…

8 மணி நேரங்கள் ago

உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றம்.. ஆறுதலுக்காக ஏங்கும் பெண்கள்.. நயன்தாரா வெளியிட்ட வைரல் பதிவு..!

நடிகை நயன்தாரா பெண்களின் ஹார்மோன் மாற்றம் மற்றும் மாதவிடாய் சமயத்தில் ஏற்படும் நிகழ்வுகள் குறித்து பதிவிட்டிருக்கின்றார். தமிழ் சினிமாவில் மிகவும்…

8 மணி நேரங்கள் ago

கேடி வேலை பார்த்த பெண்கள்.. நடிகை அதுல்யா ரவி வீட்டில் கைவரிசை.. வைரலாகும் சிசிடிவி காட்சிகள்..!!

நடிகை அதுல்யா சாட்டை கேப்மாரி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். ஜெயின் 25-வது படமான கேப்மாரி படத்தில் முத்தக் காட்சிகள் நடித்து…

9 மணி நேரங்கள் ago

மார்டன் டிரெஸ்ஸில் மனதை மயக்கும் திவ்யா துரைசாமி.. லேட்டஸ்ட் கிளிக்ஸ் இதோ..!!

பிரபல நடிகையான திவ்யா துரைசாமி முதலில் சிறிய சிறிய கதாபாத்திரத்தில் நடித்து திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். சூர்யா நடிப்பில்…

9 மணி நேரங்கள் ago

என் திருமணத்தில் கார்த்திக் தான் தேம்பி தேம்பி அழுதாரு.. எல்லாம் Love-க்காக.. பல வருட ரகசியத்தை உடைத்த குஷ்பூ..!!

80ஸ் 90ஸ் காலகட்டத்தில் ரசிகர்களின் கனவு கன்னியாக வளம் வந்தவர் குஷ்பூ. பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து குஷ்பூ பல…

9 மணி நேரங்கள் ago