#image_title
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகராக வலம் வருபவர் ஆர்யா. பல வருடங்களாக நடித்து வரும் ஆர்யா தனக்கென ஒரு அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்பதற்காக தற்போது வரை போராடி வருகின்றார். ஒரு சில திரைப்படங்கள் இவருக்கு நல்ல வரவேற்பை கொடுத்தாலும் முன்னணி நடிகர்களின் பட்டியலில் இணைய முடியவில்லை. நடிகராக மட்டுமில்லாமல் தயாரிப்பாளராகவும் இருந்து வருகிறார்.
தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு போன்ற படங்களிலும் நடித்து வரும் இவர் தொடர்ந்து முரட்டுத்தனமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். அறிந்தும் அறியாமலும் பட்டியல் போன்ற படங்களில் வித்தியாசமான திரைப்படங்களில் நடித்து வந்த ஆர்யா பின்னர் மதராசபட்டினம், பாஸ்கர் என்கின்ற பாஸ்கரன் உள்ளிட்ட திரைப்படங்களில் காதல் நாயகனாக நடித்திருந்தார்.
பின்னர் ஆர்யாவுக்கு அதன் பிறகு வெளிவந்த திரைப்படங்கள் சற்று தோல்வியை கொடுத்தது. பா ரஞ்சித் இயக்கத்தில் சார்பட்டா பரம்பரை என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படம் சூப்பர் டூப்பர் ஹிட்டு கொடுத்தது. விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை கொடுத்தது.
இப்படத்தின் இரண்டாவது பாகம் தயாராகும் என்று தகவல் வெளியானது. இதற்கிடையில் ஆர்யா திடீரென்று வில்லன் அவதாரம் எடுத்திருக்கின்றார். பா ரஞ்சித் இயக்கத்தில் அட்டகத்தி தினேஷ் நடிக்கும் புதிய திரைப்படத்தில் அவருக்கு வில்லனாக ஆர்யா நடிக்க இருக்கின்றார். இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.
பா. ரஞ்சித் ஏற்கனவே தங்கலான் திரைப்படத்தை இயக்கியிருக்கின்றார். இப்படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிக்கொண்டே போவதால் அடுத்த திரைப்படத்தை இயக்குவதற்கு தயாராக இருக்கின்றார். இந்த படத்தில் ஆர்யா வில்லனாக நடிக்க இருக்கின்றார் என்பதை கேட்ட ரசிகர்கள் பலரும் விஜய் சேதுபதியை ஃபாலோ பண்ணுகிறார் போல என்று கூறி வருகிறார்கள்.
ஜெய்ப்பூரைச் சேர்ந்த சம்பலால் என்ற வர்த்தகர், தனது ஸ்கூட்டரில் ரூ. 20 லட்சம் பணப்பையை வைத்துவிட்டு, சாலையில் கச்சோரி சாப்பிடுவதற்காக…
பெங்களூரு மெட்ரோவில் இளம்பெண் ஒருவர் தன்னை அனுமதியின்றி ரகசியமாகப் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்த நபரை கையும் களவுமாகப் பிடித்து…
நடிகர் சைஃப் அலிகான் கௌன் பனேகா கரோபதியில் கலந்துகொண்டபோது பரிசாகப் பெற்ற இரண்டு வருட நெய் விவகாரம் சமூக வலைதளங்களில்…
சீனாவில் உள்ள குவாங்சூ நகரில்லைச் சேர்ந்த நபர் ஒருவர், மற்றவர்களுக்காகப் பேசிச் சண்டையிடும் அல்லது விவாதிக்கும் வித்தியாசமான சேவையை வழங்கி…
பொதுவாக 30 முதல் 50 வயதுடைய பெண்களுக்கு மட்டுமே வரக்கூடிய கர்ப்பப்பை நார்திசுக்கட்டி, தற்போது 28 வயது இளம்பெண்ணின் வயிற்றிலிருந்து…
ஜார்ஜியா மாநிலம் டைபி தீவு அருகே முன்னாள் ராணுவ வீரர்களுக்கான தொண்டு நிறுவனமான 'நாட் லக்கி பிஷிங்' அமைப்பின் சார்பாக…