Categories: சினிமா

பிரதீப் பொறுக்கி, அஸ்வத் பெரும் பொறுக்கி.. மேடையில் ஓபனாக பேசிய இயக்குனர் மிஷ்கின்..!

Spread the love

பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகியுள்ள டிராகன் திரைப்படம் பிப்ரவரி 21ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. அஸ்வத் மாரிமுத்து இயக்கியிருக்கும் இந்த திரைப்படத்தில் அனுபாமா, மரியம் ஜார்ஜ் மற்றும் சித்ரா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்தின் பிரீ ரிலீஸ் நிகழ்ச்சி நேற்று சென்னையில் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் பட குழுவினர் அனைவரும் கலந்து கொண்ட நிலையில் அப்போது மேடையில் பேசிய இயக்குனர் மிஷ்கின், நான் இன்று எதுவும் கெட்ட வார்த்தை பேசல. ஒரு கொம்பை அறுத்து எடுத்துட்டாங்க.

இன்னும் ஒரு கொம்பு தான் இருக்கு. நான் இது போன்ற மேடைகளுக்கு வராமல் ஒரு வருடம் இடைவெளி எடுத்துக் கொள்ளலாம் என்று நினைத்தேன். பிரதீப் ரங்கநாதன் ஒரு புரூஸ்லி. இதுவரை அவன் ஆக்ஷன் படம் எதுவும் பண்ணல. ஒருவேளை என் கூட பண்ணினாலும் பண்ணுவான். ரொம்ப நாட்களுக்குப் பிறகு சினிமாவில் ஒரு இளமையான ஸ்டார் பார்க்கின்றேன். இது லக்கில் நடந்த விஷயம் கிடையாது. இதற்காக அவன் வியர்வையை கொடுத்து உழைச்சிருக்கான்.

இந்த படத்தில் அவனுக்கு நான் வில்லன். ஆனால் நல்ல வில்லன். மிகவும் அர்ப்பணிப்போடு வேலைகளை கவனிப்பான். இப்போ இருக்கிற நடிகர்கள் நான்கு படங்கள் நடிப்பாங்க. அதன் பிறகு உயரமே ஆகாமல் இரண்டு அடி வளர்ந்திடுவாங்க. நடிகர் மன்றம் எல்லாம் வச்சிருவாங்க. படம் பண்றதுக்காக பிரதீப்புக்கு ஐஸ் வைக்கிறேன் என்று சொல்லுவாங்க. இவ்வளவு சின்ன வயசுல அவனுக்கு அதிக அளவிலான ரசிகர்கள் உள்ளனர்.

அவனைப் பற்றி என்னுடைய உதவி இயக்குனர்களிடம் பேசுவேன். என்ன சார் அவன் என்ன பெரிய வெங்காயம்மான்னு கேப்பாங்க. ஆமா அவன் பெரிய வெங்காயம் தான் சொல்லுவேன். அவனுடன் வேலை பார்த்ததை எண்ணி பெருமையாக உணர்கின்றேன். அஸ்வத் மாரிமுத்து ரொம்ப கடினமாக உழைக்கக்கூடிய ஒரு இயக்குனர். இன்றைய தலைமுறை இளைஞர்களுக்கு சொல்ல வேண்டிய விஷயத்தை அவங்களுக்கான வழியில் சென்று சொல்லி இருக்கான். இந்தப் படத்திற்குப் பிறகு சிம்பு கூட ஒரு படம் பண்றான். என்று மிஸ்கின் கூறிய நிலையில் மேடையில் சில பிரபலங்களின் புகைப்படங்களை திரையிட்டு இவர் பற்றி உங்களுடைய கருத்து என்ன என்று கேட்கப்பட்டது. அப்போது பிரதீப் ரங்கநாதன் புகைப்படம் போட்டதும் மிஸ்கின் இவன் ஒரு பொறுக்கி, ஒரு நல்ல விதமான இனிய பொறுக்கி என்று கூறினார். அடுத்ததாக அஸ்வத் மாரிமுத்து புகைப்படம் போட்டதும் இவன் அவனை விட பெரும் பொறுக்கி, இனிய பெரும் பொறுக்கி என்று கலகலப்பாக பேசினார்.

Nanthini

Recent Posts

10-வது முடித்திருந்தால் போதும்.. மத்திய அரசு வேலை ரெடி… 3,003 காலிப்பணியிடங்கள்… மே 4 கடைசி… மிஸ் பண்ணிடாதீங்க… எஸ்.எஸ்.சி-யின் மெகா அறிவிப்பு…!!!

மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகளில் காலியாக உள்ள சுருக்கெழுத்தாளர், மல்டி டாஸ்கிங் ஸ்டாப் (MTS), பெர்சனல் அசிஸ்டண்ட்…

3 minutes ago

“ஈரானுக்கு இனி ஆயுதங்கள் கிடையாது?… சீன அதிபருடன் டிரம்ப் போட்ட டீல் என்ன?”… 8 ஆண்டுகளுக்குப் பிறகு சீனா செல்லும் டிரம்ப்…!

மேற்கு ஆசியாவில் போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில், ஹார்முஸ் நீரிணையைத் திறந்து வைப்பதற்கான அமெரிக்காவின் முயற்சிக்குச் சீனா தனது…

7 minutes ago

BREAKING: தபால் வாக்கு நடைமுறையில் அதிரடி மாற்றம்… 3.4 லட்சம் அரசு ஊழியர்களுக்கு ஷாக் நியூஸ்…!

தேர்தல் ஆணையம் (ECI) வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான தபால் வாக்கு செலுத்தும் நடைமுறையில் மிக முக்கியமான மாற்றத்தை அறிவித்துள்ளது. முன்னதாக, தேர்தல்…

11 minutes ago

“LIC பங்குதாரர்களுக்கு ஜாக்பாட்!… “ஒரு பங்கு வைத்திருந்தால் இன்னொரு பங்கு இலவசம்” எப்போது கிடைக்கும் தெரியுமா?… வெளியான அசத்தல் அறிவிப்பு…!!!

இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகமான எல்ஐசி (LIC), தனது பங்குதாரர்களுக்கு 1:1 என்ற விகிதத்தில் போனஸ் பங்குகளை வழங்க இயக்குநர்…

12 minutes ago

அரசியல் களத்தில் அதிரடி திருப்பம்..! பல ஆண்டு பகைக்கு முற்றுப்புள்ளியா..? சித்தப்பா காலில் விழுந்த சிராக் பஸ்வான்..!!

பீகார் அரசியலில் நீண்ட நாட்களாக நீடித்து வந்த குடும்பப் பூசலுக்கு மத்தியில், மத்திய அமைச்சர் சிராக் பஸ்வான் தனது சித்தப்பா…

14 minutes ago

“திமுகவை திட்ட மாட்டேன்”…. மேடையிலேயே போட்டுடைத்த கமல்… பதறிய அரசியல் களம்…!

சேலத்தில் நடைபெற்ற மாபெரும் பொதுக்கூட்டத்தில் பேசிய மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன், தமிழக அரசியலில் ஒரு புதிய திசையை…

16 minutes ago