எழுத்தாளர் புதுமைப்பித்தனின் சிற்றண்ணை என்ற நாவலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம் தான் உதிரிப்பூக்கள். 1979ம் ஆண்டு வெளியான இத்திரைப்படத்தில் விஜயன், அஷ்வினி, சாருஹாசன், மதுமாலினி, குழந்தை நட்சத்திரமாக அஞ்சு ஆகியோர் லீட் ரோலில் நடித்திருந்தனர். தமிழ் சினிமாவை தலை நிமிர வைத்த திரைப்படம் தான் இது. ஒரு நாவலை வைத்து எப்படி சிறந்த படமாக எடுக்க வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டு தான் உதிரிப்பூக்கள். அந்த அளவிற்கு எதார்த்தமாக இந்த திரைப்படத்தை இயக்கி இருந்தார் மகேந்திரன். பல நடிகர்கள் மற்றும் இயக்குனர்களால் சிறந்த படம் என்று மேற்கோள் காட்டப்பட்ட இந்த திரைப்படம் காதல், வாழ்க்கை மற்றும் அடுத்தவர் துன்பத்தில் இன்பம் காணும் வக்கிர புத்தி கொண்ட ஒருவன் எப்படி இருப்பான் என்பதை சமுதாயத்திற்கு எடுத்து உணர்த்தும் விதமாக இந்த காவியம் அமைந்திருந்தது.

மிகக் குறைந்த பொருட்ச அளவில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் சூப்பர் ஹிட் அடித்து 25 வாரங்களுக்கு மேல் திரையரங்குகளில் ஓடி சாதனை படைத்தது. அது மட்டுமல்லாமல் இப்படத்தின் சாதனை என்று பார்த்தால் படத்தில் நடித்த ஒவ்வொரு நடிகர்களும் அதை ஒரு கதாபாத்திரமாக பார்க்காமல் ஏதோ ஒரு ஊரில் உண்மையாலுமே வாழ்வது போல அனைவரும் அந்த படத்தில் வாழ்ந்திருப்பார்கள். படத்தின் இறுதியில் சுந்தர வடிவேலுவின் வசனம் ஒன்று, என் வாழ்க்கையில் மிகப் பெரிய தவறு உங்கள் அனைவரையும் என்னை போல் ஆக்கிவிட்டேன் என்பது அனைவரையும் கலங்க வைக்கும். இந்தத் திரைப்படத்தை தொடர்ந்து பல படங்கள் உதிரிப்பூக்கள் படத்தின் தாக்கத்தை பெற்றன.

1989 ஆம் ஆண்டின் இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் இந்த படம் திரையிடப்பட்டது. ரஷ்யாவில் பல திரையரங்குகளில் நல்ல வரவேற்பை பெற்றது. ஆனந்த விகடன் அதன் மதிப்பாய்வில் மிகவும் பாராட்டப்பட்டது. இந்த படத்திற்கு 60 மதிப்பெண்கள் வழங்கப்பட்டது. உதிரிப்பூக்கள் என்ற தலைப்பை இசையமைப்பாளர் இளையராஜா தான் இயக்குனர் மகேந்திரனுக்கு பரிந்துரைத்தார். மகேந்திரன் தன்னை பற்றி மட்டுமே கவலைப்படும் ஆண்களுடன் பழகியது மட்டுமல்லாமல் மிக மோசமான சில ஆண்களையும் பார்த்ததால் அதை வைத்தும் புதுமைப்பித்தனின் நாவலை வைத்தும் இந்த கதையை எழுதியுள்ளார்.

இந்தப் படத்தில் இடம் பெற்ற தொடக்கப் பாடலை இளையராஜா பாடியிருந்த நிலையில் மற்ற அனைத்து பாடல்களுமே பெண் பாடகிகளை கொண்டு பாடப்பட்டது. கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே பாலப்பட்டி மற்றும் டெல்லிபாளையம் கிராமங்களில் இந்த படம் 30 நாட்களில் படமாக்கப்பட்டது. அப்போது முதலமைச்சராக இருந்த எம்ஜிஆர் இந்த படத்தை பார்த்த பிறகு மகேந்திரனை அழைத்து நீண்ட நாட்களுக்குப் பிறகு நான் நிம்மதியுடன் தூங்கப்போகிறேன் என பாராட்டினார்.
