Categories: சினிமா

உங்ககிட்ட உதவி இயக்குனராக சேரனும்னு கேட்டதும் கௌதம் மேனன் சொன்ன அந்த வார்த்தை.. என்னால மறக்கவே முடியாது.. மகிழ் திருமேனி ஓபன் டாக்..!

Spread the love

மகிழ்திருமேனி தமிழ் சினிமாவில் பணியாற்றும் பிரபலமான இயக்குனர் ஆவார். ஆரம்பத்தில் இயக்குனர்கள் செல்வராகவன் கௌதம் மேனன் ஆகியோருடன் உதவி இயக்குனராக பணி புரிந்தார் மகிழ்த்திருமேனி. கௌதம் மேனன் இயக்கிய “காக்க காக்க”, “பச்சைக்கிளி முத்துச்சரம்”, “வேட்டையாடு விளையாடு” ஆகிய திரைப்படங்களில் உதவி   இயக்குனராக  பணிபுரிந்தார் மகிழ்திருமேனி. 2019 இல் “முன்தினம் பார்த்தேனே” திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார் மகிழ்திருமேனி. அதைத்தொடர்ந்து “தடையறத் தாக்க”, “மீகாமன்” 2021 ஆம் ஆண்டு “கழகத் தலைவன்” ஆகிய  திரைப்படங்களை  இயக்கினார்.

உதயநிதி ஸ்டாலினை வைத்து மகிழ்திருமேனி இயக்கிய கழக தலைவன் திரைப்படம் நல்ல விமர்சனங்களை பெற்று இவருக்கு திருப்புமுனையாக அமைந்தது. அதைத் தொடர்ந்து தற்போது அஜித்தை வைத்து விடாமுயற்சி என்ற திரைப்படத்தை இயக்கி முடித்திருக்கிறார்  மகிழ்திருமேனி.  இந்த திரைப்படம் பொங்கலுக்கு வெளியாக இருந்து தற்போது ரிலீஸ் தேதி தள்ளிப் போனது. விரைவில் திரைப்படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படியான நிலையில் மகிழ்திருமேனி சமீபத்தில் அளித்த பேட்டியில் கௌதம் மேனன் பற்றி பேசியுள்ளார். அதில், நான் முதல்முறையாக மின்னலே திரைப்படம் பார்க்கும்போது வியந்தேன். ஏனென்றால் அந்த காலகட்டத்தில் இளைஞர்களுக்கு நெருக்கமான ஒரு படமாக அந்த திரைப்படம் அமைந்திருந்தது.

தமிழ் சினிமா ஒரு காதலை காவியமாக காட்டக் கூடியது. மின்னலே படத்தில் ஒரு பொண்ணு உயிருக்கு உயிராக காதலித்த ஒருவரை பிரிந்த பிறகு இன்னொரு காதலை தொடர்வதை அற்புதமாக காட்டி இருந்தார் கௌதம் மேனன். அந்தக் கதை என்னை ரொம்பவே வியக்க வைத்தது. அப்போ யாரு இந்த டைரக்டர் என்று அன்னைக்கு எனக்கு தோணுச்சு. நான் கௌதம் மேனன் சாரை ஒருமுறை கூட பார்த்ததில்லை. ஒருமுறை அவர் கொடுத்த இன்டர்வியூ ஒன்றை பார்க்கும்போது நான் அவர் எப்படி இருப்பார் என்று ஒரு சிந்தனைகள் இருந்து எனும் அதற்கு எதிர்மறையாக தான் அவருடைய தோற்றம் இருந்தது. பிறகு ஒரு நாள் ஒரு ஸ்டூடியோவில் இருந்து நான் வெளியே வந்த போது அங்கு கௌதம் மேனன் சார் நின்று கொண்டிருந்தார்.

உடனே நான் அவரை பார்த்ததும் அவர்கிட்ட போய் பேசினேன். சார் என்னோட பேர் மகிழ் திருமேனி நான் உங்ககிட்ட உதவி இயக்குனரா சேரலாமா என்று கேட்டேன். பொதுவாக ஒரு டைரக்டர் கிட்ட போயி இப்படி கேட்டா அடுக்கடுக்கான பல கேள்விகளை கேட்பாங்க. ஏன் இன்னைக்கு நானே அப்படித்தான் உதவி இயக்குனரா சேர வரவங்க கிட்ட கேள்வி கேட்பேன். ஆனா அன்னைக்கு நான் உதவி இயக்குனராக உங்ககிட்ட சேர்ந்துக்கலாமா என்று அவர்கிட்ட கேட்டதும் சரி வந்து ஜாயின் பண்ணிக்கோ என்று ஒரே வார்த்தையில் பதில் சொல்லிட்டாரு. அவர் அன்னைக்கு சொன்னது என்னால வாழ்நாளில் மறக்கவே முடியாது என்று மகிழ்த்திருமேனி பேசியுள்ளார்.

Nanthini

Recent Posts

29 வயதே ஆன ரயில்வே ஊழியர்.. பக்கோடா கடை வாசலில் துடிதுடித்து மரணம்… நின்று கொண்டிருந்த போதே சரிந்து விழுந்த டிரைவர்… திடீர் மரணத்திற்கு இதுதான் காரணமா…?

இரயில்வே டி.ஆர்.எம் அலுவலகத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த 29 வயதான அஜய் குஷ்வாஹா, தேநீர் குடிப்பதற்காக வெளியே சென்றிருந்தபோது எதிர்பாராத…

10 மணத்தியாலங்கள் ago

அப்பாவி சிறுவனைத் தூக்கி வீசிய கொடூரன்… மின்தூக்கிக்குள் அரங்கேறிய அத்துமீறல்… புனேயில் வைரலாகும் பகீர் வீடியோ…!!!

புனேயின் சோம்வார் பேத் பகுதியில், 10 வயது சிறுவன் ஒருவன் அடுக்குமாடி குடியிருப்பின் மின்தூக்கியில் வைத்து மிகக் கொடூரமாகத் தாக்கப்படும்…

10 மணத்தியாலங்கள் ago

தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய அர்ஜுன் தாஸ்… கார் டிக்கியில் கட்டுக்கட்டாக பணம்… 2026 தேர்தல் களம் சூடுபிடிக்குது…!!!

2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நடிகர் அர்ஜுன் தாஸின் கார் தேர்தல் பறக்கும் படையினரால் சோதனை செய்யப்பட்டு,…

10 மணத்தியாலங்கள் ago

ஜிம் மாஸ்டர் தற்கொலை… அந்த 42 வயது பெண் செய்த பகீர் காரியம்… காதலா? சொத்துக்காக விரித்த வலையா?… கடைசியில் நடந்த விபரீதம்…!!!

பெங்களூருவைச் சேர்ந்த திலீப் என்ற 28 வயது ஜிம் பயிற்சியாளர், திருமணமான பெண்ணின் மிரட்டல் காரணமாக தற்கொலை செய்து கொண்ட…

11 மணத்தியாலங்கள் ago

“தாத்தா இது உங்களுக்காக தான்” விளையாட்டாக சொன்ன அந்த ஒரு பொய்… ஏம்மா என்னை ஏமாத்துற..? முதியவரின் கண்ணில் வழிந்த கண்ணீர்… அடுத்த நொடியே இளம்பெண் செய்த நெகிழ்ச்சி செயல்…!!

ஏற்கனவே விதியால் உடைந்து போயிருந்த ஒரு மாற்றுத்திறனாளி முதியவரிடம், ஒரு சிறுமி வந்து பேசுகிறாள். "பாபா, உங்களுக்கு ஏதாவது வேண்டும்…

11 மணத்தியாலங்கள் ago

ஷாக்கிங்க்..! குரங்கை விரட்ட கம்பியை தூக்கிய நபர்… தொட்டதுமே பறிபோன உயிர்.. உயிருடன் விளையாடிய ஹோட்டல் நிர்வாகம்.. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!

மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் பகுதியில் நடந்த இந்தச் சம்பவம், மின் பாதுகாப்பு குறித்த அலட்சியம் எவ்வளவு பெரிய உயிர் இழப்பை…

11 மணத்தியாலங்கள் ago