Categories: சினிமா

‘கூலி’ படத்தில் ரஜினிக்காக லோகேஷ் போட்ட மாஸ்டர் பிளான்.. தலைவரோட ரசிகர் தான், அதுக்காக இயக்குனருங்கிறத மறந்துடாதீங்க Loki…

Spread the love

நடிகர் லோகேஷ் கனகராஜ் ரஜினியை வைத்து இயக்கும் 171-வது திரைப்படத்திற்காக ஒரு மிகப்பெரிய திட்டத்தை வகுத்திருக்கின்றார். இது தொடர்பான தகவல் தற்போது வெளியாகி இருக்கின்றது.

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த்.  சூப்பர் ஸ்டார் என்று அனைவராலும் செல்லமாக அழைக்கப்பட்டு வரும் இவர் 70 வயதை தாண்டிய நிலையிலும் தற்போது வரை ஹீரோவாக நடித்து அசத்தி வருகிறார். இளம் ஹீரோக்கள் கூட இவ்வளவு சுறுசுறுப்பாக இருப்பார்களா? என்பது சந்தேகம்தான் இந்த வயதிலும் கேப்பே விடாமல் அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகின்றார்.

நெல்சன் இயக்கத்தில் வெளியான ஜெயிலர் திரைப்படத்தை தொடர்ந்து டி ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் என்கின்ற திரைப்படத்தில் கமிட்டாகி நடித்து இருக்கின்றார். இந்த திரைப்படம் முழுக்க முழுக்க ஆக்சன் படமாகவும் இப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாகவும் தகவல் வெளியானது.

இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது. அடுத்ததாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் கூலி திரைப்படத்தில் நடிக்க ஆயத்தமாகி வருகின்றார் நடிகர் ரஜினிகாந்த். ஏற்கனவே இப்படத்தின் டைட்டில் டீசர் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற ஜூலை மாதம் தொடங்கும் என்று கூறப்படுகின்றது. இந்த திரைப்படத்தில் நடிகர் ரஜினிக்கு சிரமம் எதுவும் வராமல் நடிக்க வைப்பதற்கு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் முடிவு எடுத்து இருக்கின்றாராம்.

ஏனென்றால் டி ஞானவேல் இயக்கத்தில் உருவான வேட்டையின் திரைப்படத்தில் ரஜினியை வைத்து படாதபாடு படுத்தி விட்டார்களாம். இந்த படத்தில் பல ஆக்ஷன் காட்சிகள் இருந்ததால் அவரை பிழிந்து எடுத்திருக்கிறார்கள். அது மட்டும் இல்லாமல் பல ஊர்களுக்கு சூட்டிங் அழைத்துச் சென்றதால் மிக டயர்ட் ஆகிவிட்டார் நடிகர் ரஜினிகாந்த். இதனால் ரஜினியை மிகவும் சிரமப்படுத்த வேண்டாம் என்று முடிவெடுத்திருக்கும் லோகேஷ் அதற்கான சில திட்டங்களை வகுத்திருக்கின்றாராம்.

மேலும் இந்த படப்பிடிப்பை இரண்டே இடங்களில் மட்டும் தான் நடத்தப் போகிறாராம். ஒன்று சென்னையில் இருக்கும் பிரசாந்த் ஸ்டூடியோ, மற்றொன்று ஹைதராபாத்தில் இருக்கும் ராமோஜி ஸ்டுடியோ இரண்டு இடங்களில் மட்டும் படப்பிடிப்பை முடித்து விட முடிவு செய்து இருக்கின்றார் லோகேஷ் கனகராஜ்.

ஆனால் லோகேஷ் கனகராஜ் திரைப்படம் என்றாலே ஆக்சன் காட்சிகள் நிரம்பி இருக்கும். அதுதான் அவருடைய ஸ்பெஷாலிட்டி, அப்படி இருக்கும்போது எப்படி ரஜினிகாந்தை கஷ்டப்படுத்தாமல் இப்படத்தை அவர் எடுத்து முடிக்கப் போகிறார் என்று பலரும் பேசி வருகிறார்கள். கண்டிப்பாக ஜூலை மாதத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று தகவல் வெளியாகியிருக்கின்றது.

Mahalakshmi

Recent Posts

பகீர் சிரிப்பு..! ரயில் நிலையத்தில் பயணிக்கு ‘பேன்’ பார்த்த குரங்கு.. வைரலாகும் வினோத வீடியோ..!!

ரயில் நிலையத்தில் பயணிகள் கூட்டத்திற்கு நடுவே குரங்கு ஒன்று செய்த குறும்புத்தனமான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் சிரிப்பலைகளை உருவாக்கி…

10 minutes ago

3 நாள் டைம்..! ஈரான் எல்லையில் அமெரிக்க ராணுவம் குவிப்பு…! 2003 ஈராக் போருக்குப் பின் நடக்கும் மிகப்பெரிய ஸ்கெட்ச்…!!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஈரானுக்கு எதிராக அமெரிக்கா முன்னெப்போதும் இல்லாத வகையில் தனது ராணுவ பலத்தைப் பெருக்கி வருகிறது. ஏற்கனவே…

11 minutes ago

பகீர்..! இந்தியா வந்த சரக்கு கப்பல்கள் மீது ஈரான் துப்பாக்கிச் சூடு: ஹார்முஸ் நீரிணையில் அதிரடி சிறைபிடிப்பு..!!

ஹார்முஸ் நீரிணை பகுதியில் நிலவி வரும் போர் பதற்றத்திற்கு இடையே, இந்தியா மற்றும் இலங்கைக்கு சரக்குகளை ஏற்றி வந்த இரண்டு…

15 minutes ago

ரூ.1 1/2 லட்சம் டிக்கெட் விலை…. ஒரு ஓட்டுக்காக ஸ்காட்லாந்தில் இருந்து கிளம்பிய விஜய் ரசிகை…! வைரல் வீடியோ…!

ஸ்காட்லாந்தில் வசிக்கும் தமிழக இளம்பெண் ஒருவர், தனது ஜனநாயகக் கடமையை ஆற்றுவதற்காக ஒன்றரை லட்சம் ரூபாய் செலவு செய்து தமிழகம்…

18 minutes ago

விஜய்யோட பிள்ளைங்க வந்து “எங்க அப்பா பாத்துக்கலைன்னு குறை சொன்னாங்களா..?” பிரபல ஜோதிடர் ஓபன் டாக்..!!

நடிகர் விஜய் அரசியலில் களம் இறங்கி 'தமிழக வெற்றிக் கழகம்' என்ற கட்சியைத் தொடங்கியதில் இருந்து, அவருக்குப் பல்வேறு சவால்கள்…

18 minutes ago

BREAKING: ஈரான் போர்… இந்தியாவுக்கு அதிர்ச்சி… சற்றுமுன் உச்சக்கட்ட பதற்றம்….!

அமெரிக்க அதிபர் டிரம்ப் போர் நிறுத்தத்தை காலவரையின்றி நீட்டிப்பதாக அறிவித்த சில மணிநேரங்களிலேயே, ஈரான் கடல் பகுதியில் பதற்றம் அதிகரித்துள்ள…

54 minutes ago