புதிய BMW 7 சீரிஸ் கார் வாங்கிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ்… இதோட விலை மட்டும் எவ்வளவு தெரியுமா?…

By Begam

Published on:

‘மாநகரம்’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ். இதைத்தொடர்ந்து நடிகர் கார்த்தியின் ‘கைதி’, இளைய தளபதி விஜய் உடன் ‘மாஸ்டர்’ போன்ற படங்களை இயக்கியுள்ளார். இறுதியாக இவர் கமலஹாசன் நடித்த ‘விக்ரம்’ திரைப்படத்தை இயக்கியிருந்தார். இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இவருடைய  இயக்கத்தில் நடிக்க பல முன்னணி நடிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

   

இளைய தளபதி விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் அவர்களின் கூட்டணியில் வெளியான ‘மாஸ்டர்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து கமல்ஹாசன் நடிப்பில் விக்ரம் என்ற படத்தை இயக்கியிருந்தார். சமீபத்தில் வெளியான இப்படம் வசூலில் சாதனை படைத்தது. ‘விக்ரம்’ திரைப்படத்தின் மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கு விலை உயர்ந்த ‘லெக்ஸஸ்’ கார் ஒன்றை நடிகர் கமல்ஹாசன் பரிசாக அளித்திருந்தார்.

இதையடுத்து, தற்போது விஜய் நடிப்பில், லியோ என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் முதல் சிங்கில், ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற நிலையில், இப்படம் வரும் செப்டம்பர் 29 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது. தற்பொழுது லியோ படத்தின் வேலைகளில் பிஸியாக இருக்கும் லோகேஷ் கனகராஜ் இப்போது புதிய BMW 7 Series காரை வாங்கியுள்ளாராம். அதன் மதிப்பு ரூ. 1.70 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது. இதுதொடர்பான புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்…