Categories: சினிமா

‘அஜித்துக்கு அப்போது நடிக்க விருப்பமே இல்லை… அந்த படம் தோல்வி அடைய இதுதான் காரணம்’- பிரபல இயக்குனர் ஓபன் டாக்!

Spread the love

தமிழ் சினிமாவில் இன்று வசூல் மன்னன்களாக திகழ்ந்து வருபவர்களில் ஒருவர் அஜித். அஜித் தனது ஆரம்ப காலகட்டங்களில் வெற்றிக்காக போராடிக் கொண்டிருந்த போது அவருக்கு வெற்றி படத்தைக் கொடுத்தவர் இயக்குனர் வசந்த். அவர் இயக்கிய ஆசை திரைப்படம்தான் அஜித்தின் முதல் சூப்பர்ஹிட் படமாக அமைந்தது.

அதன் பிறகு காதல் மன்னன், வாலி, அமர்க்களம் மற்றும் முகவரி என அடுத்தடுத்து ஹிட் படங்களாகக் கொடுத்து முன்னணி நடிகராக உயர்ந்தார். ஆனால் அவரை ஒரு ஆக்‌ஷன் ஹீரோவாக்கியது முருகதாஸின் தீனா திரைப்படம்தான். அந்த படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அதன் பின்னர் ஆக்‌ஷன் பாதையில் அஜித் பயணப்பட்டார்.

#image_title

இடையில் 2003 மற்றும் 2005க்கு இடையில் அஜித்துக்கு மோசமான காலகட்டமாக அமைந்தது. அப்போது அவர் நடித்த எந்த படமும் ஹிட்டாகவில்லை. அப்போது அவர் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ரிலீஸான திரைப்படம்தான் ஜி. ஆனால் படுதோல்வி படமாக அமைந்தது.

இந்த படம் குறித்து பேசியுள்ள இயக்குனர் லிங்குசாமி அப்போது அஜித்தின் மனநிலை என்னவாக இருந்தது என்பது குறித்து பேசியுள்ளார். ஒரு நேர்காணலில் “அப்போது அஜித்துக்கு ஜி படத்தில் நடிக்க விருப்பமே இல்லை. இன்னும் சொல்லப்போனால் அப்போது அவருக்கு படங்களில் நடிக்கவே ஆசையில்லை. அவர் கார் ரேஸ்களில் ஈடுபட ஆசையாக இருந்தார். எனக்கும் அந்த படத்தில் அஜித் நடிக்கவேண்டும் என்று ஆசையில்லை.

நான் ஒரு இளம் ஹீரோவாக எதிர்பார்த்தேன். ஆனால் ரன் படத்தில் ஹிட்டால் இந்த காம்பினேஷன் அமைந்தது. வேண்டா வெறுப்பாக அஜித் நடித்ததால் எனக்கும் அந்த படத்தில் இருந்த ஆர்வமே போய்விட்டது. ஏதாவது பூகம்பம் வந்து அந்த படத்தின் புட்டேஜை எல்லாம் வாரிக்கொண்டு போய்விடாதா என உள்ளுக்குள் ஆசைப்பட்டேன். இப்படி பல காரணங்களால் அந்த படம் தோல்விப் படமாக அமைந்தது” எனக் கூறியுள்ளார். இந்த தகவல் அஜித் ரசிகர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

vinoth

Recent Posts

29 வயதே ஆன ரயில்வே ஊழியர்.. பக்கோடா கடை வாசலில் துடிதுடித்து மரணம்… நின்று கொண்டிருந்த போதே சரிந்து விழுந்த டிரைவர்… திடீர் மரணத்திற்கு இதுதான் காரணமா…?

இரயில்வே டி.ஆர்.எம் அலுவலகத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த 29 வயதான அஜய் குஷ்வாஹா, தேநீர் குடிப்பதற்காக வெளியே சென்றிருந்தபோது எதிர்பாராத…

9 மணத்தியாலங்கள் ago

அப்பாவி சிறுவனைத் தூக்கி வீசிய கொடூரன்… மின்தூக்கிக்குள் அரங்கேறிய அத்துமீறல்… புனேயில் வைரலாகும் பகீர் வீடியோ…!!!

புனேயின் சோம்வார் பேத் பகுதியில், 10 வயது சிறுவன் ஒருவன் அடுக்குமாடி குடியிருப்பின் மின்தூக்கியில் வைத்து மிகக் கொடூரமாகத் தாக்கப்படும்…

9 மணத்தியாலங்கள் ago

தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய அர்ஜுன் தாஸ்… கார் டிக்கியில் கட்டுக்கட்டாக பணம்… 2026 தேர்தல் களம் சூடுபிடிக்குது…!!!

2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நடிகர் அர்ஜுன் தாஸின் கார் தேர்தல் பறக்கும் படையினரால் சோதனை செய்யப்பட்டு,…

10 மணத்தியாலங்கள் ago

ஜிம் மாஸ்டர் தற்கொலை… அந்த 42 வயது பெண் செய்த பகீர் காரியம்… காதலா? சொத்துக்காக விரித்த வலையா?… கடைசியில் நடந்த விபரீதம்…!!!

பெங்களூருவைச் சேர்ந்த திலீப் என்ற 28 வயது ஜிம் பயிற்சியாளர், திருமணமான பெண்ணின் மிரட்டல் காரணமாக தற்கொலை செய்து கொண்ட…

10 மணத்தியாலங்கள் ago

“தாத்தா இது உங்களுக்காக தான்” விளையாட்டாக சொன்ன அந்த ஒரு பொய்… ஏம்மா என்னை ஏமாத்துற..? முதியவரின் கண்ணில் வழிந்த கண்ணீர்… அடுத்த நொடியே இளம்பெண் செய்த நெகிழ்ச்சி செயல்…!!

ஏற்கனவே விதியால் உடைந்து போயிருந்த ஒரு மாற்றுத்திறனாளி முதியவரிடம், ஒரு சிறுமி வந்து பேசுகிறாள். "பாபா, உங்களுக்கு ஏதாவது வேண்டும்…

10 மணத்தியாலங்கள் ago

ஷாக்கிங்க்..! குரங்கை விரட்ட கம்பியை தூக்கிய நபர்… தொட்டதுமே பறிபோன உயிர்.. உயிருடன் விளையாடிய ஹோட்டல் நிர்வாகம்.. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!

மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் பகுதியில் நடந்த இந்தச் சம்பவம், மின் பாதுகாப்பு குறித்த அலட்சியம் எவ்வளவு பெரிய உயிர் இழப்பை…

10 மணத்தியாலங்கள் ago