தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக கொடிகட்டி பறந்து கொண்டிருக்கும் விஜயின் நடிப்பில் இறுதியாக வெளியான கோட் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அடுத்ததாக ஜனநாயகன் திரைப்படத்தில் நடித்து வருகின்றார். எச்பினோத் இயக்கத்தில் உருவாகும் இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹிட்டே மற்றும் மமிதா பைஜூ, பாபி தியோன் உள்ளிட்டோர் நடித்து வருகிறார்கள். இந்த திரைப்படம் தான் தனது கடைசி படம் என விஜய் அறிவித்துள்ளார். ஏனென்றால் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கியுள்ள விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் களம் காண உள்ளார்.
இதனால் அவர் தவறவிட்ட படங்களின் லிஸ்டும் நீண்டு கொண்டே போகின்றது . தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உள்ள விஜய் கோடிகளில் அதிக சம்பளம் வாங்கும் ஹீரோவாகவும் உள்ளார். இவர் எவ்வளவு சம்பளம் கேட்டாலும் கொடுக்க இயக்குனர்களும் தயாராக இருக்கின்றனர். இப்படியான நிலையில் லிங்குசாமி இயக்கத்தில் விஷால் நடிப்பில் வெளியான சண்டக்கோழி திரைப்படத்தை விஜய் மிஸ் செய்துள்ளார். இது தொடர்பாக இயக்குனர் லிங்குசாமி கூறுகையில், அதாவது சண்டக்கோழி ஸ்கிரிப்ட் முடிந்ததும் விஜய் சார் கிட்ட சொல்லப் போனேன்.
படத்தின் முதல் பாதையை கேட்டதும் போதும் என்று சொல்லி நிறுத்திவிட்டார். கதையை முழுவதுமாக கேட்டு விடுங்கள் அண்ணா என்று கூறினேன். ராஜ்கிரன் மாதிரி ஒருத்தர் உள்ளே இப்படத்தில் வந்த பிறகு எனக்கு இதுல என்ன இருக்குன்னு கூறிவிட்டார். அடுத்து சூர்யாவிடம் கதை சொன்னேன். அதுவும் நடக்காமல் போய்விட்டது. நம்மிடம் ஒருத்தர் இருக்கும் போது ஏன் வெளியில் தேட வேண்டும் என்று அதை விஷாலுக்கு பண்ணினேன் என லிங்குசாமி கூறியுள்ளார். சண்டக்கோழி படம் காமெடி மற்றும் காதல் என பக்கா கமர்சியல் படமாக வெளிவந்து பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்த நிலையில் இரண்டாவது பாகமும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது குறிப்பிடத்தக்கது.