தமிழ் சினிமாவின் பிரபலமான இயக்குனர்களில் ஒருவர் தான் லிங்குசாமி. இயக்குனர் விக்ரமனிடம் உதவி இயக்குனராக பணியாற்றி வந்த இவர் கடந்த 2001 ஆம் ஆண்டு ஆனந்தம் என்ற திரைப்படத்தை முதன்முதலாக இயக்கினார். தன்னுடைய முதல் திரைப்படத்திலேயே ரசிகர்கள் மத்தியில் நல்ல பாராட்டைப் பெற்ற இவர் தொடர்ந்து பல வெற்றி திரைப்படங்களை இயக்கினார். திருப்பதி ப்ரொடக்ஷன்ஸ் என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகின்றார். காதலையும் குடும்பத்தையும் சொல்வது, காதலையும் அக்ஷனையும் சொல்வது, காதலையும் அரசியலையும் சொல்வது என வெரைட்டி காட்டிக் கொண்டே இருக்கும் இயக்குனர்களில் லிங்குசாமி முக்கியமான இடத்தில் இருக்கின்றார்.
முதன்முதலாக ஆனந்தம் திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமான லிங்குசாமி அதனை தொடர்ந்து ரன், ஜி, சண்டக்கோழி, பீமா, பையா, அஞ்சான் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார். அதே சமயம் தீபாவளி, பட்டாளம், வேட்டை மற்றும் ரஜினி முருகன் உள்ளிட்ட பல திரைப்படங்களையும் தயாரித்துள்ளார். இயக்குனர் லிங்குசாமி தன்னுடைய தயாரிப்பு நிறுவனமான திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்தின் மூலம் கமலை வைத்து உத்தம வில்லன் என்ற திரைப்படத்தை தயாரித்திருந்தார். இந்தத் திரைப்படம் பெரும் தோல்வி படமாக அமைந்த நிலையில் இப்படத்தின் தோல்வியால் பெரும் நஷ்டத்திற்கு திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தள்ளப்பட்டது.
அதன் பிறகு எப்படியோ அதிலிருந்து மீண்டு வந்தார். தற்போது கும்கி 2 திரைப்படத்தை இயக்கி வருகின்றார். இப்படியான நிலையில் தமிழ் சினிமாவின் இன்றைய நிலை குறித்து லிங்குசாமி பேசியுள்ளார். அதில், இன்றைய சினிமா என்பது பரபரப்பான மவுண்ட் ரோடு போல சென்று கொண்டிருக்கிறது. பொறுமையாக ஒரு படத்தின் கதையை எழுதி எடுப்பதற்கும் யாரும் தயாராக இல்லை ஒரு படத்தின் கதையை உணர்ந்து பார்ப்பதற்கு மக்களும் தயாராக இல்லை. அந்த அளவிற்கு தான் இன்றைய தமிழ் சினிமா நகர்ந்து கொண்டிருக்கிறது. ஆனந்தம் என்ற படத்தின் கதையை அமைதியோடு அமர்ந்து எழுதிய என்னால் இன்று அப்படி ஒரு கதையை எழுத முடியுமா என்று யோசித்தால் அது சிரமம் தான்.
கால வேகத்திற்கு ஏற்றவாறு நாமும் ஓடிக் கொண்டுதான் இருக்க வேண்டும். படத்திற்கு ஆகக்கூடிய செலவும் சம்பளமும் என ஒரு படத்தின் கதையை எழுதுவதற்கு கூட முடியாமல் ஆகிவிடுகிறது. இன்றைய தமிழ் சினிமா உத்வேகம் பெற வேண்டுமென்றால் நல்ல எழுத்தாளர்களை உள்ளே கொண்டு வர வேண்டும். அப்போதுதான் பழைய போக்கில் தமிழ் சினிமா இருக்கும். இல்லையென்றால் காலத்திற்கு ஏற்றவாறு ஓடிக்கொண்டு தான் இருக்கும் என்று லிங்குசாமி கருத்து தெரிவித்துள்ளார்.
இரயில்வே டி.ஆர்.எம் அலுவலகத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த 29 வயதான அஜய் குஷ்வாஹா, தேநீர் குடிப்பதற்காக வெளியே சென்றிருந்தபோது எதிர்பாராத…
புனேயின் சோம்வார் பேத் பகுதியில், 10 வயது சிறுவன் ஒருவன் அடுக்குமாடி குடியிருப்பின் மின்தூக்கியில் வைத்து மிகக் கொடூரமாகத் தாக்கப்படும்…
2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நடிகர் அர்ஜுன் தாஸின் கார் தேர்தல் பறக்கும் படையினரால் சோதனை செய்யப்பட்டு,…
பெங்களூருவைச் சேர்ந்த திலீப் என்ற 28 வயது ஜிம் பயிற்சியாளர், திருமணமான பெண்ணின் மிரட்டல் காரணமாக தற்கொலை செய்து கொண்ட…
ஏற்கனவே விதியால் உடைந்து போயிருந்த ஒரு மாற்றுத்திறனாளி முதியவரிடம், ஒரு சிறுமி வந்து பேசுகிறாள். "பாபா, உங்களுக்கு ஏதாவது வேண்டும்…
மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் பகுதியில் நடந்த இந்தச் சம்பவம், மின் பாதுகாப்பு குறித்த அலட்சியம் எவ்வளவு பெரிய உயிர் இழப்பை…