மறைந்த இயக்குனர் கே.வி.ஆனந்த் மகளின் திருமணம்… கலந்து கொண்ட திரை பிரபலங்கள்.. வெளியான புகைப்படங்கள்..!

By Nanthini on ஆடி 7, 2023

Spread the love

மலையாளத்தில் 1994 ஆம் ஆண்டு வெளியான தென்மாவின் கொம்பத்து என்ற திரைப்படத்தின் மூலம் ஒளிப்பதிவாளராக அறிமுகமானவர்தான் கே வி ஆனந்த். தன்னுடைய முதல் திரைப்படத்திலேயே சிறந்த ஒளிபதிவாளர் ஆன இவருக்கு தேசிய விருது கிடைத்தது. அதனைத் தொடர்ந்து காதல் தேசம், நேருக்கு நேர் மற்றும் செல்லமே உள்ளிட்ட பல திரைப்படங்களில் இவர் ஒளிப்பதிவாளராக பணியாற்றினார்.

   

அதே சமயம் கனா கண்டேன் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அவதாரம் எடுத்த இவர் அயன், கோ, அனேகன் மற்றும் காப்பான் உள்ளிட்ட பல திரைப்படங்களை முன்னணி நடிகர்களை வைத்து இயக்கினார். இதனிடையே கடந்த 2021 ஆம் ஆண்டு கொரோனா பாதிப்பால் இவர் திடீரென உயிரிழந்தார். இவருக்கு சினேகா மற்றும் சாதனா என்ற இரண்டு மகள்கள் உள்ளன.

   

 

இந்நிலையில் கேபி ஆனந்த் மகள் சாதனாவிற்கு விஷ்ணுராஜ் என்பவர் உடன் நேற்று திருமணம் நடந்து முடிந்தது. அதனைத் தொடர்ந்து திருமண வரவேற்பு நடைபெற்ற நிலையில் அந்த நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி கலந்து கொண்டார். மேலும் பல பிரபலங்களும் திருமண விழாவில் கலந்து கொண்ட நிலையில் தற்போது அந்த புகைப்படங்கள் வைரல் ஆகி வருகிறது.