“காய்ச்சலுக்கு கோமியா?”…. சர்ச்சையை ஏற்படுத்திய சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி… தேர்வு சீர்திருத்தக் குழுவில் திடீர் நியமனம்….!

Spread the love

மத்திய அரசு, தேசிய அளவிலான தேர்வு முறைகளில் நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி வெளிப்படைத் தன்மையையும் நம்பகத்தன்மையையும் உறுதிசெய்வதற்காக நந்தன் நீலகேனி தலைமையில் 6 பேர் கொண்ட உயர்மட்டக் குழுவை அமைத்துள்ளது. ஆதார் திட்டத்தின் முக்கிய சிற்பியான நந்தன் நீலகேனி தலைமையிலான இந்தக் குழுவில், இஸ்ரோ முன்னாள் தலைவர் எஸ். சோமநாத், முன்னாள் உளவுத்துறை இயக்குநர் தபன் தேகா, சென்னை ஐஐடி இயக்குநர் வி. காமகோடி, முன்னாள் கல்விச் செயலர் அனிதா கர்வால் மற்றும் லாஜிஸ்டிக்ஸ் நிபுணர் அம்ரித் லால் மீனா ஆகியோர் உறுப்பினர்களாகச் செயல்படவுள்ளனர்.

தேர்வு சீர்திருத்தக் குழுவின் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள டாக்டர் வி. காமகோடி, கல்வி மற்றும் ஆராய்ச்சித் துறையில் நீண்ட அனுபவம் கொண்டவர். கணினி அறிவியலில் முனைவர் பட்டம் பெற்ற இவர், சென்னை ஐஐடியின் இயக்குநராகப் பணியாற்றி வருகிறார். குறிப்பாக, உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட இந்தியாவின் முதல் மைக்ரோபிராசஸரான ‘சக்தி’ திட்டத்தை வெற்றிகரமாகத் வழிநடத்திய பெருமை இவருக்கு உண்டு. மேலும், தேசிய பாதுகாப்பு ஆலோசனை வாரியத்தின் உறுப்பினராகவும் பணியாற்றியுள்ள இவர், நாட்டின் தொழில்நுட்ப வளர்ச்சியில் முக்கியப் பங்காற்றியுள்ளார்.

அதேவேளையில், டாக்டர் காமகோடி அவர்களின் சில கருத்துக்கள் பொதுவெளியில் பெரும் விவாதங்களையும் சர்ச்சைகளையும் ஏற்படுத்தியுள்ளன. கடந்த 2025-ஆம் ஆண்டு நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பேசிய அவர், மாட்டுக்கழிவு மற்றும் கோமியத்தில் மருத்துவக் குணங்கள் இருப்பதாகத் தெரிவித்ததுடன், அது காய்ச்சலைக் குணப்படுத்தியதாகக் கூறிய சொந்த அனுபவத்தையும் பகிர்ந்துகொண்டார். இருப்பினும், அலோபதி மருத்துவம் மற்றும் அதிகாரப்பூர்வ மருத்துவ அமைப்புகள் கோமியத்தின் மருத்துவப் பயன்களை அங்கீகரிக்காத நிலையில், ஒரு உயர்கல்வி நிறுவனத்தின் இயக்குநர் இவ்வாறு பேசியது தீவிர விமர்சனங்களுக்கு உள்ளானது.

தற்போது பல்வேறு தேசிய அளவிலான நுழைவுத் தேர்வுகளில் முறைகேடுகள் மற்றும் தொழில்நுட்பச் சிக்கல்கள் குறித்த கவலைகள் எழுந்துள்ள சூழலில், இந்த புதிய உயர்மட்டக் குழுவின் உருவாக்கம் முக்கியத்துவம் பெறுகிறது. தொழில்நுட்பம் மற்றும் நிர்வாகத் துறைகளில் சிறந்து விளங்கும் வல்லுநர்களைக் கொண்ட இந்தக் குழு, தற்போதைய தேர்வு முறைகளை முழுமையாக ஆய்வு செய்து, எதிர்காலத்தில் எவ்வித குளறுபடிகளும் இல்லாதவாறு அதிநவீன, பாதுகாப்பான மற்றும் வெளிப்படையான தேர்வு முறையை உருவாக்கத் தேவையான பரிந்துரைகளை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Nanthini

Recent Posts

திக் திக் திக்.. காதலனுடன் சேர்ந்து கணவனைக் கொன்று… மாட்டு வண்டியில் பிணத்தைக் கடத்திய மனைவி… தெலங்கானாவில் அரங்கேறிய கொடூர சம்பவம்…!!

தெலங்கானா மாநிலம் பூபாலபள்ளி மாவட்டத்தில் குடும்பத் தகராறு காரணமாகத் தனது காதலனுடன் சேர்ந்து கணவரைக் கொடூரமாகக் கொலை செய்த மனைவி…

11 minutes ago

ஐயோ… என்ன கொடுமை இது?… செல்போனால் நேர்ந்த பயங்கரம்… அக்காவுடன் தகராறு… 8 வயது சிறுவன் சோக முடிவு… உ . பி – யில் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

ஜாலான் மாவட்டம் குடவுந்த் காவல் எல்லைக்குட்பட்ட தூங்கர்பூர்வா கிராமத்தில், மொபைல் போன் தொடர்பான தகராறில் 8 வயது சிறுவன் ஒருவன்…

15 minutes ago

ஐயோ… என்ன சத்தம் அது?… தீடீரென சுக்குநூறாக நொறுங்கிய கார்… குஜராத்தில் பயங்கர சிஎன்ஜி வெடிப்பு… நெஞ்சை பதறவைக்கும் வீடியோ…!!

குஜராத் மாநிலம் வடோதராவின் நவி ராம்வாடி பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த சிஎன்ஜி கார் ஒன்று திடீரென தீப்பற்றி, எதிர்பாராதவிதமாக பயங்கர சத்தத்துடன்…

41 minutes ago

என் பொண்ணு கூட இருக்கியாடா?… மகளின் காதலனை கதறக் கதற அடித்துக் கொன்ற தந்தை… பெங்களூரில் அரங்கேறிய கோரச் சம்பவம்…!!

பெங்களூரில், கேரளா மாநிலம் பாலக்காடு மாவட்டத்தைச் சேர்ந்த 22 வயதுடைய கிரண் என்ற இளைஞர், அதே பகுதியில் வசிக்கும் 19…

1 மணத்தியாலம் ago

ஐயோ கொடுமையே… GST பில் கேட்ட உரிமையாளர் மீது தாக்குதல்… பேக்கரி உரிமையாளரை அடித்து நொறுக்கி… JDS நிர்வாகிகள் வெறியாட்டம்… இணையத்தில் வீடியோ வைரல்…!

துருவேக்கெரே KSRTC பேருந்து நிலையம் எதிரே உள்ள கேக் வேர்ல்ட் பேக்கரியில் JDS தலைவர்கள் இருவர் ஈடுபட்ட மோதலில், பேக்கரி…

1 மணத்தியாலம் ago