தமிழ்நாடு முதலமைச்சரும் பிரபல நடிகருமான விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், தனது முதல் முழுநீள ஆக்ஷன்-அட்வென்ச்சர் திரைப்படமான ‘சிக்மா மூலமாக இயக்குநராக அறிமுகமாகிறார். சுந்தீப் கிஷன் மற்றும் ஃபாரியா அப்துல்லா நடிப்பில் உருவாகியுள்ள இத்திரைப்படத்தின் ப்ரீ-ரிலீஸ் நிகழ்வில் கலந்து கொண்ட ஜேசன் சஞ்சய், தனது தந்தையைப் பற்றி முதன்முறையாக மனம் திறந்து பேசி ரசிகர்களை நெகிழ வைத்துள்ளார்.
நிகழ்வில் பேசிய ஜேசன் சஞ்சய், “என் அப்பா ‘சிக்மா’ படத்தின் வெளியீட்டிற்காக மிகவும் ஆர்வத்துடன் காத்திருக்கிறார். ஆனால் அவர் என் படத்தை ப்ரொமோட் செய்ய வரமாட்டார். விளம்பரங்கள் அனைத்தும் படத்தை மட்டுமே மையமாகக் கொண்டு இருக்க வேண்டும், அதில் தந்தையின் நிழல் படக்கூடாது என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். தற்போது அவர் முதலமைச்சராக இருப்பதால் அவருக்குப் பல பொறுப்புகள் உள்ளன” என முதிர்ச்சியுடன் பேசினார். அவர் பேசி முடித்ததும் கூட்டத்தில் “டிவிகே… டிவிகே…” என ஆதரவாளர்கள் எழுப்பிய முழக்கங்களை, அவர் சிரித்தபடியே தம்ப்ஸ்-அப் காட்டி ஏற்றுக்கொண்டார்.
மேலும், “தந்தையிடமிருந்து நான் கற்றுக்கொண்ட மிக முக்கியமான குணம் நேரத்தைக் கடைப்பிடிப்பதுதான். அவர் எனக்கு ஸ்பூன்-ஃபீட் செய்யாமல், தரையிறங்கி சுயமாக அனுபவம் பெற ஊக்குவித்தார்” என்றும் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். தந்தையின் பிரம்மாண்ட நிழலில் இருந்து விலகி, தன் சொந்த உழைப்பால் திரையுலகில் தடம் பதிக்கும் ஜேசன் சஞ்சய்யின் இந்தப் பேச்சு இணையத்தில் காட்டுத்தீ போல பரவி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.
