தான் படிக்கும் பள்ளிக்கு பெருமை சேர்த்த இயக்குனர் பாரதிராஜவின் பேத்தி.. பொன்னாடை போர்த்தி மரியாதை செய்த தாத்தா.. வைரலாகும் வீடியோ..

By Begam on மாசி 27, 2024

Spread the love

பாரதிராஜா தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர். சினிமாவில் 70ஸ், 80ஸ்களில் பல நடிகர் நடிகைகளை அறிமுகப்படுத்தியவர் பாரதிராஜா. கிராமத்து மண்வாசனையில் இயக்கப்பட்ட இவரின் திரைப்படங்கள் அன்றைய கால மக்களால் பெரிதும் விரும்பப்பட்டது. 16 வயதினிலே திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராய் அறிமுகமானார்.

#image_title

பின் கிழக்கே போகும் ரயில், அலைகள் ஓய்வதில்லை, கடலோர கவிதைகள் என இவர் இயக்கிய படங்கள் ஏராளம். இவரின் திரைப்படங்களை இன்று வரை ரசிப்பவர்களும் உண்டு. இவர் வெள்ளித்திரை மட்டுமல்லாமல் சின்னத்திரையிலும் சீரியலை இயக்கியுள்ளார். மேலும் இவரின் முதல் மரியாதை, வேதம் புதிது, கருத்தம்மா போன்ற திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றியை சந்தித்தன.

   
   

 

இவர் இயக்குனராய் மட்டுமல்லாமல் பல திரைப்படங்களில் துணை கதாபாத்திரமாகவும் நடித்துள்ளார். நம்ம வீட்டு பிள்ளை, வாத்தி போன்ற பல திரைப்படங்களின் மூலம் தனது நடிப்பினையும் வெளிக்காட்டினார். இயக்குனர் பாரதிராஜாவின் மகன் தான் மனோஜ் பாரதிராஜா. இவர் தமிழ் சினிமாவில் நடிகராக மட்டுமின்றி இயக்குனராகவும் வலம் வந்து கொண்டுள்ளார். நடிப்பிற்காக பல்வேறு படிப்புகளை முடித்த மனோஜ் பாரதிராஜா தமிழ் சினிமாவில் கால் பதித்து கலக்கியவர்.

தாஜ்மஹால்,  சமுத்திரம், கடல் பூக்கள் என ஹிட் திரைப்படங்களில் நடித்த இவர், பொம்மலாட்டம், மணிரத்னம் இயக்கிய பாம்பே மற்றும் இயக்குனர் ஷங்கரின் எந்திரன் உள்ளிட்ட திரைப்படங்களில் இவர் உதவி இயக்குனராகவும் பணிபுரிந்துள்ளார். இவருக்கு திருமணமாகி இரண்டு மகள்கள் உள்ளனர். அவர்களில் ஒருவரான மதிவதனி மனோஜ் என்பவருக்கு பாரதிராஜா பொன்னாடை போர்த்தி பாராட்டிய வீடியோ தற்பொழுது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

அதாவது, பாரதிராஜா அவர்களின் பேத்தியான மதிவதனி மனோஜ் தான் படிக்கும் பள்ளிக் கூடத்திற்காக ஒரு குறும்படத்தை தன் தாத்தா திரு.பாரதிராஜாவை வைத்து இயக்கி உள்ளார். சின்ன வயதிலேயே சிறப்பாக படபிடிப்பில் வேலை செய்வதை பார்த்து இயக்குனர் பாரதிராஜா தனது பேத்திக்கு பொன்னாடை போர்த்தி பாராட்டியுள்ளார். இதோ அந்த வீடியோ…

 

View this post on Instagram

 

A post shared by Nikil Murukan (@onlynikil)