நடிகர் விஜய் நடித்த ஜனநாயகன் படத்துக்கு பிறகு நடிகர் தனுஷ் நடிக்கும் ஒரு புதிய படத்தை எச் வினோத் டைரக்ட் செய்ய உள்ளார். இந்த படத்தை தயாரிப்பாளர் எஸ்எஸ் லலித்குமார் தயாரிக்க உள்ளார். இந்த படத்தின் ஸ்கிரிப்ட் ஒர்க் மற்றும் ப்ரீ புரடக்சன்ஸ் பணிகளுக்காக தயாரிப்பு நிறுவனத்திடம் 3 மாதங்கள் வரை அவகாசம் கேட்டிருக்கிறார் இயக்குனர் எச் வினோத்.
மேலும் இப்போது நடிகர் தனுஷ் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடித்து வருகிறார். அதன்பிறகு வருகிற 2026 ஏப்ரலில் லப்பர் பந்து இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிக்க உள்ளார். அதன்பிறகுதான் எச் வினோத் இயக்கும் புதிய படத்தில் நடிக்க உள்ளார். அதனால் வருகிற 2026ம் ஆண்டில் ஜூன் அல்லது ஜூன் மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்க உள்ளது. சென்னையில் உள்ள ஆதித்யா ராம் படப்பிடிப்பு தளத்தில் இந்த படத்துக்காக பிரமாண்ட செட்கள் அமைக்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
