தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக கலக்கி கொண்டிருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் ஜெயிலர் 2 திரைப்படத்தில் நடித்து வருகின்றார். அனிருத் இசையில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் இந்த திரைப்படத்தில் ரஜினியுடன் இணைந்து ரம்யா கிருஷ்ணன், மோகன்லால் மற்றும் சிவராஜ் குமார் உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர். படப்பிடிப்பு கேரளாவில் தொடர்ந்து விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. இந்தப் படத்தில் தெலுங்கில் முன்னணி நடிகராக வலம் வரும் பாலையா கேமியா ரோலில் நடிக்க உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
இருந்தாலும் ஜெயிலர் 2 படத்தில் நடிக்கும் நடிகர்கள் பற்றி இதுவரை எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. இந்த நிலையில் டெய்லர் 2 படத்திற்கு முன்பு ரஜினி லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான கூலி திரைப்படத்தில் நடித்து முடித்து விட்டார். தற்போது இந்த படத்தின் போஸ்ட் ப்ரோடுக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. ஆகஸ்ட் 14ஆம் தேதி கூடி திரைப்படம் வெளியாக உள்ளது. இவ்வாறு கூலி மற்றும் ஜெயிலர் 2 என ரஜினி அடுத்தடுத்து படங்களில் நடித்து வரும் நிலையில் அவரின் அடுத்த படத்தைப் பற்றிய பேச்சுகள் தற்போது பரபரப்பாக போய்க்கொண்டிருக்கிறது.
ஜெயிலர் 2 படத்திற்கு பிறகு ரஜினி நடிக்கப் போகும் அவரின் 173 ஆவது திரைப்படத்தை இயக்கப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. அனேகமாக தலைவர் 173 திரைப்படத்தை ஐசரி கணேஷ் இயக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக சொல்லப்படுகிறது. இது ஒரு பக்கம் இருக்க இந்த படத்தை இயக்கப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்நிலையில் ஜனநாயகன்படத்தை இயக்கி வரும் ஏசு வினோத் சமீபத்தில் ரஜினியை சந்தித்து ஒரு கதையை சொன்னதாகவும் அந்த கதை ரஜினிக்கு மிகவும் பிடித்து விட்டதாகவும் ஒரு தகவல் வெளிவந்துள்ளது. ரஜினியின் மகள் சௌந்தர்யா இந்த கதையை கேட்ட நிலையில் அவருக்கும் இந்த கதை பிடித்து போக ரஜினியின் 173 ஆவது திரைப்படத்தை எச்டி வினோத் இயக்க அதிக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று தெரிகிறது.
இரயில்வே டி.ஆர்.எம் அலுவலகத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த 29 வயதான அஜய் குஷ்வாஹா, தேநீர் குடிப்பதற்காக வெளியே சென்றிருந்தபோது எதிர்பாராத…
புனேயின் சோம்வார் பேத் பகுதியில், 10 வயது சிறுவன் ஒருவன் அடுக்குமாடி குடியிருப்பின் மின்தூக்கியில் வைத்து மிகக் கொடூரமாகத் தாக்கப்படும்…
2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நடிகர் அர்ஜுன் தாஸின் கார் தேர்தல் பறக்கும் படையினரால் சோதனை செய்யப்பட்டு,…
பெங்களூருவைச் சேர்ந்த திலீப் என்ற 28 வயது ஜிம் பயிற்சியாளர், திருமணமான பெண்ணின் மிரட்டல் காரணமாக தற்கொலை செய்து கொண்ட…
ஏற்கனவே விதியால் உடைந்து போயிருந்த ஒரு மாற்றுத்திறனாளி முதியவரிடம், ஒரு சிறுமி வந்து பேசுகிறாள். "பாபா, உங்களுக்கு ஏதாவது வேண்டும்…
மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் பகுதியில் நடந்த இந்தச் சம்பவம், மின் பாதுகாப்பு குறித்த அலட்சியம் எவ்வளவு பெரிய உயிர் இழப்பை…