Director Gautham Menon

இனிமே சத்தியமா நான் படங்களில் நடிக்க மாட்டேன்… வேற வழியில்லாமல் நடிச்சேன் – பிரபல இயக்குனர் தந்த ஓபன் ஸ்டேட்மென்ட்!

By Elango on மாசி 16, 2026

Spread the love

காக்க காக்க வாரணம் ஆயிரம் விண்ணைத்தாண்டி வருவாயா வேட்டையாடு விளையாடு போன்ற ஹிட் படங்களை கொடுத்தவர் இயக்குனர் கௌதம் மேனன். பிறகு தயாரிப்பாளராக மாறிய அவர் பல படங்களில் கேரக்டர் ரோலில் நடித்திருக்கிறார். சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய இயக்குனர் கௌதம் மேனன் கூறியதாவது, இனி நான் சினிமாவில் நடிக்க போறது இல்லே. அதுக்காக நான் சினிமாவுக்கு வரலே. இப்போ நடிக்கற ஆர்வமும் பெருசா எனக்கு இல்லே,

ஒரு கட்டத்தில் நான் நடிக்க வேண்டிய கட்டாயம் இருந்தது. ஒரு சில படங்களில் இயக்குனர்களுக்காக நடிக்கிறேன். வெற்றிமாறன் கூப்பிட்ட போது, அவர் எப்படி படம் எடுக்கிறார் என்பதை தெரிந்துகொள்ள ஒரு வாய்ப்பாக இருக்கும்ன்னு நடிக்க ஒத்துக்கிட்டேன். ஆனால் நடிக்கும் போதெல்லாம் நடிப்பதற்காக நான் வரலையேன்னு எண்ணம் ஓடிக்கிட்டே இருக்கும். அதனால் இனி நடிக்க போறது இல்லே என்று இயக்குனர் கௌதம் மேனன் உறுதியாக கூறியிருக்கிறார்.