அழைத்து வாய்ப்பு தந்த விஜய்… குடிபோதையில் தள்ளாடி சென்று கெரியரை காலி பண்ணிக்கொண்ட பிரபல இயக்குனர்..

By vinoth

Updated on:

தமிழ் சினிமாவில் 90 கள் முழுக்க காதல் கதைகளுக்கான காலமாக அமைந்தது. அந்த காலகட்டத்தில் வெளியான பெரும்பாலான படங்கள் காதல் படங்களாக அமைந்தன. அப்போதைய இளம் நடிகர்களான அஜித், விஜய், பிரசாந்த், சூர்யா, பிரபுதேவா உள்ளிட்டவர்கள் காதல் கதைகளில் நடித்துதான் தங்களை முன்னணி நடிகர்களாக வளர்த்துக் கொண்டனர்.

அப்படி காதலை மையமாகக் கொண்டு 1998 ஆம் ஆண்டு உருவான திரைப்படம்தான் தினம்தோறும். இந்த படத்தில் முரளி, சுவலட்சுமி, மணிவண்ணன், ரேணுகா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். நாகராஜ் இயக்கி இருந்தார். இந்த படம் 100 நாட்களுக்கு மேல் சூப்பர் ஹிட்டாக அமைந்தது. இதனால் படத்தின் இயக்குனர் தினம்தோறும் நாகராஜ் என்றே அழைக்கப்பட்டார்.

   

இடையில் அவர் கௌதம் மேனன் இயக்கிய மின்னலே மற்றும் காக்க காக்க ஆகிய படங்களில் பணியாற்றினார். காக்க காக்க படத்தில் இடம்பெற்ற காதல் காட்சிகளை எல்லாம் எழுதியது நாகராஜ்தான் என்று சொல்லப்படுகிறது.

சூப்பர்ஹிட் படம் கொடுத்தும் அடுத்து அவர் வேறு எந்த படத்தையும் நீண்ட நாட்களாக இயக்கவில்லை. ஜோடி உள்ளிட்ட சில படங்களில் நடித்திருந்தார். அதன் பின்னர் பல ஆண்டுகள் காணாமல் போனார்.  அதன் பிறகு 2013 ஆம் ஆண்டுதான் அவர் இயக்கிய மத்தாப்பு என்ற திரைப்படம் ரிலீஸானது.

dhinandhorum nagaraj mathappoo interview

சினிமாவில் அவருக்கு இவ்வளவு பெரிய இடைவெளி ஏற்பட்டதற்கு அவரின் குடிப்பழக்கம்தான் காரணம் என சொல்லப்படுகிறது. சமீபத்தில அவர் அளித்த ஒரு நேர்காணலில் இதை அவரே கூறியுள்ளார். தினந்தோறும் படம் வெற்றி பெற்றதும் விஜய்யும் அவரது தந்தையும் அழைத்து நாகராஜுக்கு விஜய்யின் அடுத்த படத்தை இயக்கும் வாய்ப்பைக் கொடுத்துள்ளனர். ஆனால் அடுத்த நாளே குடித்துவிட்டு சென்று அவர்கள் முன் நின்றதால் இவரால் படத்தை இயக்க முடியாது என அவர்கள் இவரை வேண்டாம் என சொல்லிவிட்டார்களாம்.

Director Dhinandhorum Nagaraj at Mathapoo Movie Audio Launch Photos

நாளுக்கு நாள் அதிகமான குடிப்பழக்கத்தால் அவரால் திறமை இருந்தும் அடுத்த படத்தை இயக்க முடியவில்லை. இப்போது அவர் குடிப் பழக்கத்தில் இருந்து மீண்டு அடுத்த படத்தை இயக்கும் ஆயத்தத்தில் ஈடுபட்டு வருவதாக சொல்லப்படுகிறது.