நான் கதை சொல்ல போனா ஹீரோக்கள் கேட்க மாட்டேங்கறாங்க – சூப்பர் ஹிட் படங்களை தந்த பிரபல இயக்குனர் புலம்பல்!

By Elango on மார்கழி 12, 2025

Spread the love

தமிழ் சினிமாவில் பாரதி கண்ணம்மா பொற்காலம் தவமாய் தவமிருந்து பாண்டவர் பூமி ஆட்டோகிராப் என பல வெற்றிப் படங்களை கொடுத்தவர் இயக்குனர் சேரன். சமீபத்தில் சேலத்தில் நடந்த விழா ஒன்றில் இயக்குனர் சேரன் பங்கேற்றார். அப்போது சேரன் பேசியதாவது, நான் யாரையும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று நினைத்ததில்லை. நான் இருக்கும் இடத்தில் எல்லோரையும் சந்தோசமாக வைத்துக் கொள்வேன். என்னுடைய படத்தில் வில்லனே இருக்க மாட்டார்கள். ஏனென்றால் நான் வில்லன்களை விரும்புவதில்லை. அதே நேரத்தில் நானும் வில்லனாக இருப்பதில்லை. இதுதான் என்னுடைய வாழ்க்கை முறை.

எனக்கு வாழ்க்கையில் நிறைய பிரச்சனைகள் இருக்கிறது. கடன் நிறைய இருக்கிறது. அதனால் என்னால் படம் எடுக்க முடியவில்லை. படம் எடுக்க தயாரிப்பாளர் கிடைக்கவில்லை. கதை சொல்வதற்கு போனால் ஹீரோக்கள் கதை கேட்க மறுக்கிறார்கள். இந்த மாதிரி நிறைய பிரச்சனைகள் இருக்கிறது.ஆனால் நான் நிம்மதியாக தூங்குகிறேன். சந்தோசமாக இருக்கிறேன். அதற்கு காரணம் என்னவென்றால் வாழ்க்கையை ஈஸியாக எடுத்துக் கொண்டேன். எல்லாவற்றையும் கடக்கும் சக்தி நம்மிடம்தான் உள்ளது. எல்லோரையும் நேசியுங்கள். சிரித்த முகத்துடன் அன்பாக பேசுங்கள். எல்லா பிரச்சினைகளும் சரியாகி விடும் என்று இயக்குனர் சேரன்பேசியிருக்கிறார்.