Categories: சினிமா

வேட்டியை கழட்டி நடிக்க வைத்த இயக்குனர்.. கோபத்தில் ஷூட்டிங் ஸ்பாட்டை அதகள படுத்திய மம்முட்டி.. தயாரிப்பாளர் பாலாஜி பிரபு பகிர்ந்த சம்பவம்..!

Spread the love

தென்னிந்திய சினிமாவில் ஒரு தவிர்க்க முடியாத இயக்குனராக இருப்பவர் தான் பாரதி. இன்று ஒட்டுமொத்த ரசிகர்களாலும் திரை உலகில் கொண்டாடப்படும் பாரதி ஆரம்ப காலத்தில் பல அவமானங்களை சந்தித்துள்ளார். இவர் முதன்முதலில் சின்ன பிள்ளை என்ற படத்தை தான் இயக்கினார். அந்தப் படத்திற்குப் பிறகு ஒரு பெரிய படத்தை இயக்க வேண்டும் என்ற எண்ணம் பாரதிக்கு வந்ததால் விஜயகாந்தை சந்தித்து கதை சொல்ல விரும்பியுள்ளார். அதற்காக சுமார் இரண்டு வருடத்திற்கு மேலாக விஜயகாந்த் வீட்டிற்கு நடையாய் நடந்தும் இவருக்கு அதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை. ஒரு கட்டத்தில் வாட்ச்மேன் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ள நடுரோட்டில் கீழே விழுந்த பாரதி என்றாவது ஒரு நாள் விஜயகாந்தை வைத்து நான் படம் பண்ணியே தீருவேன் என்ற வைராக்கியத்தோடு அங்கிருந்து புறப்பட்டார்.

அதன் பிறகு தான் மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டியை சந்திக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. அவரை சந்தித்து தனது கதையை அவர் ஐந்து நிமிடத்தில் கூறிய நிலையில் ஆச்சரியமடைந்த மம்முட்டி மலையாள படத்தின் ஷூட்டிங் கில் இருந்த போது இயக்குனரிடம் ஒரு இரண்டு மணி நேரம் டைம் கேட்டுவிட்டு பாரதியை அமர வைத்து மொத்த கதையையும் கேட்டுள்ளார். குறிப்பாக அந்த கதையில் ஹீரோயினியை காப்பாற்றுவதற்காக ஹீரோ கையை பிடிக்கும் சீன் மற்றவர்களுக்கு தவறுதலாக புரிய ஹீரோவை வேட்டியை கழட்டி ஊர் முன்னாடி வைத்து அடிக்கும் சீன் அவருக்கு மிகவும் பிடித்து விட்டது.

உடனே இந்த கதையில் நான் நடிக்கிறேன் எல்லா ஏற்பாடையும் பண்ணுங்க என்று மம்முட்டி பாரதியிடம் கூற தயாரிப்பாளர் இல்லை என பாரதி கூறியதும் மம்முட்டியே என்ட்ரி என்ற ஒரு தயாரிப்பாளரை அறிமுகம் செய்து வைத்த நிலையில் படப்பிடிப்பும் தொடங்கியுள்ளது. படப்பிடிப்பு காட்சிகள் அனைத்தும் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்க மம்முட்டி எதிர்பார்த்து காத்திருந்த வேஷ்டி கழட்டி அடிக்கும் சீனும் அன்று வந்துள்ளது. அன்று பெருமையோடு மம்முட்டி இன்னைக்கு நான் ஒரு சூப்பர் சீன்ல நடிக்கப் போறேன் எல்லோரும் பாருங்கள் என்று சொல்லிக் கொண்டிருந்தார். அப்போது ரஞ்சித், மன்சூர் அலிகான், ஆர் சுந்தர்ராஜன் ஆகியோர் உடன் இருந்த நிலையில் அவர்கள் மம்முட்டியை பார்த்து எங்க தமிழ் நடிகர்கள் எல்லாம் இந்த மாதிரி சீன்ல நடிக்க மாட்டாங்க உங்களுக்கு மலையாளத்தில் நடித்து பழக்கம் ஆயிருக்கும் நீங்க கிரேட் என்று கூறி பேசியுள்ளனர்.

இது மம்முட்டி மனதை சற்று பாதித்த நிலையில் ஏன் என்று கேட்க ஊர் முன்னாடி இப்படி வேஷ்டி இல்லாமல் நிற்கிறது எல்லாரும் அசிங்கமா பாப்பாங்க எவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டாராக இருந்தாலும் நான் வேஷ்டியோட நடிக்கிறேன் நீ என்ன வேணாலும் அடிச்சுக்கோ என்று சொல்லி தான் அடிப்பாங்க உங்கள மாதிரி யாரும் நடிக்க ஒத்துக்க மாட்டாங்க என்று கூறியுள்ளனர். இதனால் கடுப்பான மம்முட்டி பாரதியை அழைத்து நான் இந்த சீன்ல நடிக்க மாட்டேன் வேஷ்டியோட வந்து நிற்கிறேன் அடிச்சுக்கோங்க என்று கூறி அடம் பிடித்துள்ளார். இதனால் பாரதிக்கும் மம்முட்டிக்கும் இடையே தகராறு ஏற்பட பாரதி இதை விட்டுக் கொடுக்காமல் தயாரிப்பாளருக்கு இந்த செய்தி போக ஒரு கட்டத்தில் இந்த சீனில் மம்முட்டி நடித்துள்ளார்.

கடுப்பில் வேஷ்டியை கழட்டி போட்டுவிட்டு நான் வேஷ்டி இல்லாமல் நிற்கிறேன் சீன் எடுத்துக்கோங்க என்று சொல்லி நடிச்சு முடிச்சுட்டு அன்னைக்கு புல்லா வேஷ்டியை கட்டாம போறவங்க வரவங்க எல்லார்கிட்டயும் நான் வேஷ்டி இல்லாமல் இருக்கிறேன் பாருங்க என்று கோபத்தில் பேசிக் கொண்டிருந்தார். எப்படியோ முழு படத்தையும் எடுத்து முடித்த பிறகு இனி பாரதி கூட படம் பண்ண கூடாது என்று மம்முட்டி முடிவெடுத்துள்ளார். பிறகு முழு படத்தையும் பாரதி போட்டுக் காட்டியதும் வேஷ்டி சீனில் அசந்து போன மம்முட்டி பாரதியை கட்டித் தழுவி நீங்க சொன்னது தான் உண்மை இந்த சீன் இல்லனா படமே இல்ல நான் தான் தப்பா புரிஞ்சுகிட்டேன் என்று கூறி பேசியுள்ளார்.

அப்படி உருவான திரைப்படம் தான் 1988 ஆம் ஆண்டு வெளியான மறுமலர்ச்சி திரைப்படம். இந்தத் திரைப்படத்திற்கு பிறகு பாரதிக்கு நல்ல மவுசு இருந்ததால் பல நடிகர்கள் தேடி வந்தனர். அப்படித்தான் விஜயகாந்த் நிறுவனத்திலிருந்து பாரதிக்கு போன் கால் வர அவரை நேரில் சந்திக்க அன்னைக்கு எந்த வாசலில் இருந்து தூக்கி வீசப்பட்டாரோ அதே வாசலில் காரில் சென்று போய் இறங்கி தன்னுடைய வைராக்கிய நிறைவேறியது என்று மனதுக்குள் நினைத்து புகழ்ந்துள்ளார். இந்த சம்பவத்தை பிரபல தயாரிப்பாளர் பாலாஜி பிரபு சமீபத்தில் அளித்த பேட்டியில் பகிர்ந்து கொண்டார்.

Nanthini

Recent Posts

“அவ்வளவு தான் டைம் ஓவர்”… ஆளுநர் கையில் நாலே நாலு ஆப்ஷன்.. கடைசியில் மொத்தமாக மாறும் கேம்… விஜய்க்கு காத்திருக்கும் டுவிஸ்ட்…!

தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை கண்டிராத ஒரு பரபரப்பான திருப்பமாக, 2026 சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் ஒரு 'தொங்கு சட்டசபை'…

26 minutes ago

“கிம் ஜாங் உன்–னை தொட்டாலே.. இனி அணுஆயுத தாக்குதல் தான்”… அமெரிக்காவுக்கு செக் வைத்த வடகொரியா…. இனி தான் ஆட்டமே ஆரம்பம்…!

வடகொரியாவின் அணுஆயுதக் கொள்கையில் மேற்கொள்ளப்பட்டுள்ள அதிரடி மாற்றம் சர்வதேச அளவில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. வடகொரிய அதிபர் கிம் ஜாங்…

32 minutes ago

மாற்றுத்திறனாளி இளைஞருக்கு நேர்ந்த கொடுமை: 10 நாட்களில் கைவரிசை காட்டிய ‘கில்லாடி’ மனைவி…!

திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகே உள்ள கோதை மங்கலம் சேர்ந்த மாற்றுத்திறனாளி ஒருவருக்கு, தரகர் மூலம் பெண் தேடப்பட்டு வந்துள்ளது.…

36 minutes ago

அடுத்தடுத்த அதிர்ச்சி… தமிழக அரசியலில் ஒரு ‘லைவ்’ திரில்லர்… காமராஜ் எம்.எல்.ஏ விவகாரத்தில் சிக்கிய தளபதி விஜய்?… போட்டுடைத்த டிடிவி தினகரன்…!

2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் தற்போது ஒரு விறுவிறுப்பான அரசியல் திரில்லர் திரைப்படத்தைப் போல மாறியுள்ளது. ஆட்சி அமைக்கத்…

40 minutes ago

மணல் கொள்ளையைத் தட்டிக்கேட்ட இளைஞருக்கு நேர்ந்த கதி: பாட்டிலால் குத்திக் கொடூரக் கொலை..! தமிழகத்தை உழுக்கிய பயங்கரம்…!

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே மணல் கடத்தலைத் தடுத்த கார்த்திக் என்ற இளைஞர், முன்விரோதம் காரணமாகக் கண்ணாடி பாட்டிலால் குத்திக்…

42 minutes ago

மதுரையில் பரபரப்பு : பதவியேற்புக்கு முன்பே “அமைச்சர்” பட்டம்… வைரலாகும் போஸ்டர்…!

மதுரை மேலூர் சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் பெ. விஸ்வநாதன், அதிமுகவின் கோட்டையாகக் கருதப்பட்ட இப்பகுதியில் சுமார் 2,731 வாக்குகள்…

45 minutes ago