Categories: சினிமா

சிவாஜி கணேசனுக்கு கதை சொல்லி சம்மதம் வாங்கிய இயக்குனர் பாலா… பிடித்திருந்தும் நடிக்க முடியாத துரதிர்ஷ்டம்!

Spread the love

தமிழ் சினிமாவில் நடிப்புக்கு இலக்கணம் வகுத்த நடிகர்களில் ஒருவர் சிவாஜி கணேசன். பி யு சின்னப்பா, எம் ஆர் ராதா, பாலையா என சிறந்த நடிகர்களின் வரிசையில் பராசக்தி மூலமாக அதிர்வலையை உருவாக்கியவர் சிவாஜி கணேசன். அதன் பிறகு 25 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் நடிகர் திலகமாக வலம் வந்தார். ஆனால் அவருக்கு ஒரு முறை கூட நடிப்புக்கான தேசிய விருது வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்குக் காரணம் அப்போது தேசிய விருதுகளில் அதிகம் ஆதிக்கம் செலுத்திய வங்காள மற்றும் மலையாள சினிமாவினர்தான். அவர்கள் சிவாஜியின் நடிப்பை மிகை நடிப்பு என கடுமையான விமர்சனங்களையும் கேலிகளையும் கொண்டிருந்தனர். தமிழ் சினிமாவிலேயே கூட எம் ஜி ஆர் ரசிகர்கள் சிவாஜி நடிப்பை அழுமூஞ்சி நடிப்பு என்றும் ஓவர் ஆக்டிங் நடிப்பு என்றும் கேலி செய்வது நடந்துள்ளது.

1980 களில் ரஜினி, கமல் போன்ற இளம் நடிகர்களின் வரவாலும், சினிமாவின் முகம் மாறியதாலும், சிவாஜி கணேசன் கதாநாயக வேடங்களில் நடிப்பதில் இருந்து ஒதுங்கி குணச்சித்திர வேடங்களில் நடிக்க ஆரம்பித்தார். இதற்கு பிறகு அவருக்கு முதல் மரியாதை, தேவர் மகன் மற்றும் படையப்பா போன்ற படங்களில் சிறப்பான கதாபாத்திரங்கள் அமைந்தன.

இந்நிலையில் சேது படம் மூலமாக கவனம் ஈர்த்த இயக்குனர் பாலா, அடுத்து தான் இயக்க இருந்த நந்தா படத்தில் ராஜ்கிரண் நடித்திருந்த கதாபாத்திரத்துக்காக முதலில் சிவாஜி கணேசனைதான் நடிக்க அனுகியுள்ளார். இதற்காக சிவாஜியின் அன்னை இல்லத்துக்கு சென்று அவருக்கு கதையும் சொல்லியுள்ளார்.

கதையைக் கேட்ட சிவாஜி கணேசன் நடிப்பதற்கும் சம்மதம் தெரிவித்துள்ளார். ஆனால் அப்போது சிவாஜி கணேசனுக்கு உடல்நலம் சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதன் பிறகு தன்னுடைய படத்தில் கடல் பகுதிகளில் எல்லாம் ஷூட்டிங் நடத்த வேண்டி உள்ளதால், அவரை கஷ்டப்படுத்தக் கூடாது என்பதற்காக சிவாஜி கணேசன் அதில் நடிக்க வேண்டாம் என பாலா முடிவு செய்துள்ளார். அதன் பிறகுதான் ராஜ்கிரணை அந்த கதாபாத்திரத்தில் நடிக்கவைத்துள்ளார்.

vinoth

Recent Posts

BREAKING : இந்தியாவின் தேடப்படும் பயங்கரவாதி அமீர் ஹம்சா லாகூரில் சுடப்பட்டார்… பெரும் பரபரப்பு..!!

பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தைபாவின் (LeT) இணை நிறுவனரும், ஹபீஸ் சயீதுக்கு அடுத்தபடியாக அந்த அமைப்பின் மிக முக்கியத் தலைவருமான அமீர்…

5 minutes ago

“என் வாழ்க்கையே நரமாகிடுச்சு” பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட தாயை 4-ம் மாடியிலிருந்து வீசிய மகன்… நெஞ்சை உலுக்கும் சம்பவம்..!!

பெங்களூருவில் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட தனது வயதான தாயை, நான்காவது மாடியில் இருந்து கீழே தள்ளி கொலை செய்த மகனின் கொடூரமான…

12 minutes ago

ஆர்சிபி டிஜே செய்த ‘அந்த’ ஒரு தப்பு!… கொதித்தெழுந்த சிஎஸ்கே நிர்வாகம்… பிசிசிஐ-க்கு பறந்த புகார் கடிதம்… மைதானத்தில் நடந்த ‘பகீர்’ சம்பவம்…!!!

ஐபிஎல் 2026 சீசனில், பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு…

27 minutes ago

“நீ ஒரு முஸ்லிம், உன்னால் இந்திய ராணுவத்தில் சேர முடியாது” ஏளனமாக பேசிய ஊர் மக்கள்… தடைகளை உடைத்து இந்திய ராணுவத்தில் இணைந்த இளைஞர்.. “நீ சாதிச்சிட்ட” குவியும் பாராட்டுக்கள்…!!

“நீ ஒரு முஸ்லிம், உன்னால் இந்திய ராணுவத்தில் சேர முடியாது” என ஏளனம் செய்தவர்களின் விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்து, ராணுவத்தில்…

32 minutes ago

“இந்த பூனைக்குட்டிக்கு உங்க பூனையே தந்தை” நீங்க தான் வளர்க்கணும்… பக்கத்துக்கு வீட்டாரின் வாக்குவாதத்தால் போலீஸ் ஸ்டேஷன் வரை சென்ற பஞ்சாயத்து…!!

பெங்களூரு பகுதியில் செல்லப் பிராணிகளால் அண்டை வீட்டாருக்கு இடையே ஏற்பட்ட விசித்திரமான மோதல், காவல்துறையினரின் தலையீட்டால் ஒருவழியாகச் சமாதானத்தில் முடிந்தது.…

38 minutes ago

சீனாவிடம் இருந்து சாட்டிலைட்டை விலைக்கு வாங்கிய ஈரான்… விண்ணில் இருந்து அமெரிக்கத் தளங்களைத் தூக்கியடித்த ‘மாஸ்டர் பிளான்’… அதிர வைக்கும் உளவுத் தகவல்கள்…!!!

சமீபத்திய ஈரான்-அமெரிக்கா மோதலின் பின்னணியில், வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ நிலைகளைக் கண்காணிக்க ஈரான் சீனத் தயாரிப்பு செயற்கைக்கோளைப்…

41 minutes ago