#image_title
தமிழ் சினிமாவில் 80 களின் இறுதியில் நகைச்சுவை நடிகையாக அறிமுகமானார் ஷகிலா. கவுண்டமணி செந்தில் நகைச்சுவை காட்சிகளில் பல படங்களில் அவர் நடித்து வந்தார். இதற்கிடையில் அவர் திடீரென மலையாள சினிமாவுக்குள் புகுந்தார்.
மலையாள சினிமாவில் நடித்த அவர் பி கிரேட் படங்களில் நடிக்க தொடங்கினார். அவர் படங்கள் தொடர்ந்து ஹிட்டாக மலையாள பி கிரேட் சினிமாக்களின் நிரந்தர ஹீரோயினாக மாறினார். அவரின் படங்கள் 90 களில் சக்கை போடு போட்டு கல்லா கட்டின. மொழி தாண்டி தமிழ் நாட்டிலும் அவரது படங்கள் வெளியாகின.
ஒரு கட்டத்தில் மலையாள சினிமாவின் முன்னணி நடிகர்களான மம்மூட்டி, மோகன் லால் படங்களுக்கே ஷகிலாவின் படங்கள் கடும் போட்டியாக அமைந்துள்ளன. இதனால் அவர்கள் எல்லாம் திட்டம் போட்டே ஷகீலாவை மலையாள சினிமாவை விட்டே விரட்டி விட்டதாக ஒரு தகவல் கிசுகிசுக்கப்பட்டது. ஆனால் ஷகிலா இதுவரை அதுபற்றி எதுவும் வாய்திறக்கவில்லை.
மலையாள சினிமாவில் இருந்து வெளியேறிய ஷகீலா தொடர்ந்து தமிழ் படங்களில் மீண்டும் நகைச்சுவை வேடங்களில் நடிக்க தொடங்கினார். விஜய்யின் அழகிய தமிழ் மகன் மற்றும் பாஸ் என்கிற பாஸ்கரன் ஆகிய படங்களில் நடித்த அவர் தொடர்ந்து சந்தானத்தின் பல படங்களில் நடிக்க தொடங்கினார்.
பின்னர் தொலைக்காட்சி நிகழ்ச்சியான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அந்த நிகழ்ச்சியில் அவரின் மறுமுகத்தைப் பார்த்த ரசிகர்கள் அவரை வெகுவாக ரசிக்க ஆரம்பித்தனர். அதன் பின்னர் அவர் மீதான இமேஜ் மாறியது.
இப்போது பிரபலங்களை நேர்காணல் செய்து வருகிறார். அவரின் வீடியோக்கள் கவனம் பெற்று வருகின்றன. பல பி கிரேட் படங்களில் நடித்து லட்சக்கணக்கில் சம்பாதித்தாலும் இப்போது பொருளாதார ரீதியாக தான் கஷ்டப்பட்டு வருவதாக நேர்காணல்களில் கூறியுள்ளார்.
வெனிசுலாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தின் இடிபாடுகளுக்குள் சிக்கி, 5 நாட்களுக்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்ட 'கிஸெல்' என்ற சிறிய நாய்…
கஜகஸ்தானில் படித்து வரும் இந்திய மாணவி ஒருவர், தனது சமூக ஊடகப் பக்கத்தில் வெளியிட்ட ரீல்ஸ் வீடியோ ஒன்று இணையத்தில்…
புனே தொழிலதிபர் கேதன் அகர்வால் கொலை வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட சியா கோயல் மற்றும் அவரது காதலர் சேத்தன் சௌத்ரி…
தமிழ்நாடு முழுவதும் உள்ள 2,640 டாஸ்மாக் பார்களை உடனடியாக மூட வேண்டும் என்று தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.…
தமிழ்நாட்டில் நடைபெற்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியை அமைத்துள்ளது. எனினும்,…
தவெக சட்டமன்ற உறுப்பினர்களை திமுக மற்றும் மு.க.ஸ்டாலின் ஆகியோர் குறுக்கு வழியில் ஆட்சி அமைக்க இழுக்கப் பார்ப்பதாக அமைச்சர் சி.டி.ஆர்.…