actor vikram

நடிகர் விக்ரமுக்கு காது கேட்காமல் போயிடுச்சு… அப்பவும் அந்த சீன்ல கஷ்டப்பட்டு நடிச்சார் – இயக்குனார் பாலா சொன்ன சீக்ரெட்!

By Elango on மாசி 24, 2026

Spread the love

கடந்த 1999ம் ஆண்டில் இயக்குனர் பாலா இயக்கிய முதல் படம் சேது. இந்த படத்தில் நாயகனாக நடித்த பிறகுதான் நடிகர் விக்ரம் பெரிய அளவில் சினிமாவில் கொண்டாடப்பட்டார். பிறகு முன்னணி ஹீரோவாகவும் மாறினார். சேது படம் குறித்து இயக்குனர் பாலா, சமீபத்தில் ஒரு நேர்காணலில் கூறியதாவது, சேது படம் பண்ணும் போது கிளைமாக்ஸ் காட்சியில் ஒல்லியா தெரியணும்ன்னு விக்ரம் 20 நாள் டயட்டுல இருந்தார். வெறும் நீராகாரம் தான் குடிச்சார்.

அப்போது சித்த வைத்திய சாலையில் ஒரு காட்சி. அவரை படுக்க வைத்து வைத்தியம் பண்ற மாதிரி சீன். 20 நாளா சாப்பிடாமல் டயட் இருந்ததால் காது அடைத்திருக்கும். விக்ரமுக்கு காது கேட்காது. நான் தட்டி தட்டி கேக்குதா கேக்குதா… சொல்றது புரியுதா என்று கேட்டு கேட்டு அவரை நடிக்க வைப்பேன். அப்படி ஒரு சிரமப்பட்டு தான் அந்த கேரக்டர் விக்ரம் பண்ணினார் என்று இயக்குனர் பாலா கூறியிருக்கிறார்.