Director Bala

சேது படம் வெளிவந்த போது…அப்படி ஒரு சம்பவம் நடந்தது – இயக்குனர் பாலா தந்த ஓபன் ஸ்டேட்மென்ட்!

By Elango on மாசி 8, 2026

Spread the love

இயக்குனர் பாலா இயக்கிய முதல் படம் சேது. கடந்த 1999ம் ஆண்டில் இந்த படம் வெளியானது. இந்த படத்தில் நடித்த பிறகு தான் நடிகர் விக்ரம் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக மாறினார். இந்த படம் குறித்து சமீபத்தில் பேசிய இயக்குனர் பாலா கூறியதாவது, சேது படம் ரிலீஸ் ஆகி நல்லா ஓடிட்டு இருந்தது. அப்போது செல்போன் இல்லாத காலம். அந்த படத்தை பார்த்த வயசான ஒரு அம்மா என்னோட வீட்டு லேண்ட் லைன் போனுக்கு கால் பண்ணிட்டாங்க.

அவங்களுக்கு பிள்ளைங்க இல்ல, வாரிசு யாருமே இல்ல. ஆனா சொத்து இருக்கும் போல. உனக்கு நான் ஏதாவது பண்ணனும் போல தோணுது. என்கிட்ட நிலம் கொஞ்சம் இருக்குது. அதை நான் உனக்கு எழுதி தரட்டுமா என்று அந்தம்மா போனில் கேட்டாங்க. அதாவது இலவசமா தர்றதா சொன்னாங்க. அதெல்லாம் எனக்கு வேண்டாம்மா. அதை ஏதாவது அனாதை ஆசிரமம் முதியோர் இல்லத்துக்கு எழுதி கொடுத்துடுங்கன்னு சொல்லிட்டேன் என்று இயக்குனர் பாலா கூறியிருக்கிறார்.