தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர்தான் பாலா. விக்ரம் நடித்த சேது திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான இவர் 25 ஆண்டுகளாக பத்து படங்களை மட்டுமே இயக்கியுள்ளார். அந்த படங்கள் அனைத்தும் தனித்துவமானவை. ஒவ்வொரு படமும் காலம் கடந்தும் கொண்டாடப்படும் படங்களாக இருப்பதால் பாலாவை தமிழ் சினிமாவிற்கு கிடைத்த பொக்கிஷம் என்று அனைவரும் கருதுகிறார்கள். தற்போது பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் வணங்கான் திரைப்படம் உருவாகியுள்ள நிலையில் இந்த திரைப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்தத் திரைப்படம் வருகின்ற ஜனவரி 10ஆம் தேதி பொங்கல் பண்டிகைக்கு திரைக்கு வர உள்ளது.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழா அண்மையில் நடைபெற்ற நிலையில் இயக்குனர் பாலா திரையுலகில் அறிமுகமாகி 25 ஆண்டுகள் ஆனதை அந்த விழாவின் போது கொண்டாடினர். இந்த விழாவில் இயக்குனர்கள் மணிரத்தினம், மாரி செல்வராஜ், நடிகர்கள் சிவகார்த்திகேயன், சூர்யா மற்றும் சுகாசினி உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் பலரும் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து சூர்யாவின் தந்தை சிவக்குமார் இயக்குனர் பாலாவிடம் நேர்காணல் நடத்திய போது பல சுவாரசியமான கேள்விகளை கேட்டார்.
அதில் நீங்கள் ரஜினி அல்லது கமல் கால்ஷூட் கொடுத்தால் அவர்களுடன் பணியாற்றுவீங்களா என்று கேள்வி எழுப்பினார். அதற்கு வாய்ப்பு இல்ல சார் என்று சட்டென பதிலளித்த பாலா அதற்கான விளக்கத்தையும் கொடுத்துள்ளார். அதாவது அவர்களுடைய பாதை வேறு என்னுடைய பாதை வேறு என்று பாலா பதில் சொன்னார். இதற்கு சிவகுமார், உங்க படங்களில் அகோரியாக நடிக்க கூட ரெடி என்று அவர்கள் சொன்னால் நீங்கள் ஒத்துப்பீங்களா என்று மற்றொரு கேள்வி கேட்ட நிலையில் அதற்கு சிரித்துக் கொண்டே அவர்கள் சொல்ல மாட்டாங்க என்று பாலா பதில் அளித்தார். தற்போது இந்த செய்தி இணையத்தில் வைரலாகி வருகிறது.