தென்னிந்திய சினிமா அளவில் முன்னணி இயக்குனராக வலம் வந்து கொண்டிருக்கும் அட்லீ இந்தியில் ஷாருக்கான் மற்றும் நயன்தாரா நடிப்பில் ஜவான் திரைப்படத்தை இயக்கியிருந்தார். தொடர் தோல்விகளையே சந்தித்து வந்த அட்லீக்கு இந்த திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்தது. ஏனென்றால் இந்த திரைப்படம் உலக அளவில் ஆயிரம் கோடியை வசூல் செய்தது. இதைத்தொடர்ந்து சன் பிக்சர்ஸ் நிறுவனம் அட்லீயை வைத்து அடுத்த படத்தை தயாரிக்க திட்டமிட்டிருந்தது. இந்தப் படத்தில் அல்லு அர்ஜுன் நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியானது. இந்தப் படத்திற்காக அட்லி கொடுத்த பட்ஜெட்டை பார்த்து ஒட்டுமொத்த சன் பிக்சர்ஸ் நிர்வாகத்திற்கும் தலைச்சுற்றி விட்டதாம். அந்த அளவிற்கு மிகப்பெரிய பட்ஜெட்டை அட்லி கொடுத்துள்ளார்.

இதனால் கடுப்பான சன் பிக்சர்ஸ் நிர்வாகம் அட்லி சொல்லும் பட்ஜெட்டுக்கு தங்களால் படத்தை தயாரிக்க முடியாது என மறுத்துவிட்டது. இப்படியான நிலையில் ஏற்கனவே ரெய்டு மற்றும் சங்கர் இயக்கத்தில் பிரம்மாண்ட பட்ஜெட்டில் வெளியான ராம்சரண் திரைப்படம் என படுதோல்வி நெருக்கடியில் சிக்கி இருக்கும் தில் ராஜுவுக்கு உதவ அல்லு அர்ஜுன் முடிவெடுத்துள்ளார். இதனால் அட்லி கதையை தில் ராஜு தயாரிக்க அல்லு அர்ஜுன் பரிந்துரைத்துள்ளார். சன் பிக்சர்ஸ் இடம் ஒப்பந்தம் போடும்போது தனக்கு சம்பளமாக 55 கோடி ரூபாய் கேட்ட அட்லி தற்போது தில் ராஜுவிடம் 100 கோடி ரூபாய் சம்பளம் கேட்டுள்ளார்.

இதைப் பார்த்து மிரண்டு போன தில் ராஜு இது நமக்கு செட் ஆகாது என கை விரித்ததாக கூறப்படுகிறது. இருந்தாலும் ஒரு வழியாக பேசி இந்த படத்திற்கு தில் ராஜு ஒப்புக்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஜவான் வெற்றியின் போதே சம்பளத்தை உயர்த்த அட்லீ திட்டமிட்டுள்ளார். ஆனால் சன் பிக்சர்ஸ் உடன் அதற்கு முன்னதாகவே 55 கோடிக்கு ஒப்பந்தம் செய்து விட்டதால் அடுத்த முறை பார்த்துக் கொள்ளலாம் என இருந்துள்ளார். அப்போது நடுவில் தில் ராஜு வந்ததால் அவரால் தர முடியுமா முடியாதா என்று கூட யோசிக்காமல் அட்லீ 100 கோடி ரூபாயை சம்பளமாக கேட்டுள்ளார்.

இறுதியாக அட்லி இயக்கிய தெறி படத்தை லிட்டில் ஜான் என்ற பெயரில் ரிலீ செய்த நிலையில் அது வசூலில் பெரும் அடி வாங்கியதால் அட்டைக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டது. இதையும் தனது சம்பள மூலம் சரிகட்ட நினைத்த அட்லிக்கு தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு பக்கமும் பிரம்மாண்ட தயாரிப்பாளர்களே தலைதரிக்க ஓடும் அளவுக்கு சம்பளம் கேட்டுள்ளார். அல்லு அர்ஜுன் ஹீரோவாக நடிக்கும் இந்த படத்தில் அட்லி இருக்கிறாரா இல்லையா என்பது குறித்து அறிவிப்பை விரைவில் வெளியாகும் என தெரிகிறது.
