தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குநராக வலம் வரும் இயக்குநர் ஷங்கர் அவர்களிடம் உதவி இயக்குநராக பணியாற்றி திரையுலகில் காலடி எடுத்து வைத்தவர் தான் இயக்குனர் அட்லீ. இவர் இயக்குநர் ஷங்கர் இயக்கிய எந்திரன், நண்பன் ஆகிய படங்களில் ஷங்கரிடம் உதவி இயக்குநராக பணியாற்றியுள்ளார்.
இதைத்தொடர்ந்து அட்லீ ‘ராஜா ராணி’ படத்தின் மூலம் தமிழில் இயக்குநராக அறிமுகமானார். அடுத்தடுத்து, தெறி, மெர்சல், பிகில் ஆகிய படங்கள் ஹிட் அடிக்கவே, இயக்குநர் அட்லீ முன்னணி இயக்குநராக மாறினார்.தற்போது பாலிவுட்டிலும் அடியெடுத்து வைத்துள்ள அட்லீ, நடிகர் ஷாருக்கான் மற்றும் நயன்தாரா வைத்து ‘ஜவான்’ படத்தை இயக்கியுள்ளார். இத்திரைப்படம் ரிலீசாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இயக்குநர் அட்லியும், விஜய் டிவியின் கனா காணும் காலங்கள் தொடரில் அறிமுகமாகி தொலைக்காட்சி, சினிமா என பிரபலமாக வலம் வந்த ப்ரியாவும் 2014ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு அழகான ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு மீர் என பெயர் சூட்டியுள்ளனர்.
சோசியல் மீடியாவில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்க கூடியவர் இயக்குனர் அட்லீ. இவர் தற்பொழுது தனது மகனின் முதல் பிறந்தநாளை பாரிசில் மனைவி பிரியாவுடன் இணைந்து கொண்டாடிய புகைப்படங்களை இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதைப்பார்த்த ரசிகர்களும், திரைபிரபலங்களும் பிறந்தநாள் வாழ்த்த்துக்களை கூறி வருகின்றனர். அதோடு மட்டுமின்றி ரசிகர்கள் பலரும் ‘இப்போ தான் பொறந்த மாதிரி இருக்கு.. அதுக்குள்ளே ஒரு வயசு ஆகிடுச்சா..?’ என்று கமெண்ட் செய்தும் வருகின்றனர்.
View this post on Instagram