பிரியா என்னை பாரு.. காதல் மனைவிக்கு அன்பு முத்தம் கொடுத்த அட்லீ.. இணையத்தில் வைரலாகும் கியூட் வீடியோ..!!

By Priya Ram

Updated on:

முன்னணி இயக்குனராக வலம் வரும் அட்லீ கடந்த 2013-ஆம் ஆண்டு வெளியான ராஜா ராணி திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இந்த படம் சுமார் 100 நாட்கள் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடியது.

   

இதனையடுத்து கலைப்புலி தாணு தயாரிப்பில் தளபதி விஜய் வைத்து அட்லீ தெறி படத்தை இயக்கினார். இந்த படம் சுமார் 100 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்தது. அந்த வெற்றியை தொடர்ந்து விஜயுடன் மெர்சல், பைரவா என அடுத்தடுத்த வெற்றி படங்களை இயக்கியவர் அட்லீ.

கடைசியாக அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் வெளியான ஜவான் திரைப்படம் மாபெரும் அளவில் வெற்றி பெற்றது. இந்த படம் தமிழ், ஹிந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் ரிலீஸ் ஆனது. உலகம் முழுவதும் ஜவான் படம் நல்ல வரவேற்பை பெற்று தந்தது.

அந்த படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருந்தார். இவரது படங்கள் அனைத்தும் மெகா ஹிட் ஆனது. குறிப்பாக ஜவான் படம் ஆயிரம் கோடி ரூபாய் வசூலை எட்டியது. அட்லீ நடிகை பிரியாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருவரும் காதல் ஜோடிகளாக வலம் வருகின்றனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் அட்லீ ப்ரியா தம்பதியினருக்கு ஆண் குழந்தை பிறந்தது. சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் அட்லீ தனது மனைவியுடன் இருக்கும் வீடியோவை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார் அதனை பார்த்து ரசிகர்கள் லைக்ஸ்களை அள்ளி விடுகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Atlee Kumar (@atlee47)

author avatar
Priya Ram