அடுத்த 1000 கோடி பார்சல்… ஜவானை தொடர்ந்து பான் இந்திய ஹீரோவை வைத்து படம் எடுக்கும் அட்லீ… இணையத்தில் கசிந்த முக்கிய அப்டேட்…

By Begam

Published on:

தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குநராக வலம் வரும் இயக்குநர் ஷங்கர் அவர்களிடம் உதவி இயக்குநராக பணியாற்றி திரையுலகில் காலடி எடுத்து வைத்தவர் தான் இயக்குனர் அட்லீ. இதைத்தொடர்ந்து ‘ராஜா ராணி’ படத்தின் மூலம் தமிழில் இயக்குநராக அறிமுகமானார். அடுத்தடுத்து, தெறி, மெர்சல், பிகில் ஆகிய படங்கள் ஹிட் அடிக்கவே, இயக்குநர் அட்லீ முன்னணி இயக்குநராக மாறினார்.

   

தற்போது பாலிவுட்டிலும் அடியெடுத்து வைத்துள்ள அட்லீ, நடிகர் ஷாருக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி வைத்து ‘ஜவான்’ படத்தை இயக்கியிருந்தார். கௌரி கானின் தயாரிப்பு நிறுவனமான ரெட் சில்லிஸ் என்டர்டெயின்மென்ட் ஜவான் திரைப்படத்தை தயாரித்திருந்தது. சமீபத்தில் ஜவான் திரைப்படம் ஆஸ்ட்ரா  விருதுக்கும்  பரிந்துரைக்கப்பட்டது. இதுவே  ஆஸ்ட்ரா  விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட முதல் இந்திய திரைப்படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதன்மூலம் இயக்குனர் அட்லி தற்பொழுது உலக அளவில் கவனிக்கத்தக்க, முன்னணி இயக்குனர்களில்  ஒருவராக மாறியுள்ளார்.   இந்நிலையில் இயக்குனர் அட்லீ இயக்கும் அடுத்த திரைப்படத்திற்கான அப்டேட் இணையத்தில் வெளியாகியுள்ளது. அதன்படி அட்லீ அடுத்ததாக நடிகர் அல்லு அர்ஜுனை வைத்து AA 24 திரைப்படத்தை இயக்க உள்ளாராம்.

இத்திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ளது. மேலும் திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏப்ரல் முதல் வாரத்தில் வெளியாகும் என்றும் கூறப்பட்டு வரும் நிலையில், இத்திரைப்படத்தை பற்றிய முக்கிய அப்டேட்டுகள் இணையத்தில் வெளியாகியுள்ளது. அதன்படி த்ரிஷாவை ஹீரோயினாக நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும், அனிருத் இசையமைப்பாளராகவும் கமிட்டாகியுள்ளாராம். இதனால் ரசிகர்கள் அடுத்த 1000 கோடி வேட்டைக்கு அட்லீ தயாராகி விட்டதாக கமெண்ட் செய்து வருகின்றனர்.